• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-19 12:00:03    
ச்சியாங் சூ மாநிலத்தின் கிராமங்களிலான தரமான கல்வி

cri
சமூகம் மற்றும் பொருளாதாரத்தின் சரிசமனற்ற வளர்ச்சியால், சீனாவில் கிராமப்புறங்களில் பள்ளிகளை நடத்துவது, ஆசிரியர்களின் எண்ணிக்கை, தரம் ஆகிய துறைகளில் பல பிரச்சினைகள் நிலவுகின்றன. கிராம குழந்தைகள் நகரக் குழந்தைகளைப் போல் தரமான கல்வியை பெறுவதற்கு, சீனாவில் பல்வேறு நிலை அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இன்றைய நிகழ்ச்சியில் ச்சியாங் சூ மாநிலத்தின் jin tan நகரில் கிராமக் கல்வி பற்றி எடுத்து கூறுகி்ன்றோம்.

கடந்த சில ஆண்டுகளில், கிராமப் பள்ளிகளுக்கான நிதி ஒடுக்கீட்டை jin tan நகராட்சி அதிகரித்து, பள்ளிகளில் புதிய கட்டிடங்களை கட்டியமைத்ததோடு, பழைய கட்டிடங்களைச் செப்பனிட்டு, புதிய கல்வி வசதிகளை வழங்கியது.

An tou எனும் கிராமப் பள்ளியில், மாணவர்கள் துவக்க மற்றும் இளையோர் இடை நிலை கல்வி பெறலாம். கடந்த 2 ஆண்டுகளில், பள்ளியின் தோற்றம் மற்றும் வசதி, கல்வி வசதி முதலியவற்றை மேம்படுத்த, தொடர்புடைய வாரியங்கள் சுமார் 80 இலட்சம் யுவானை ஒதுக்கீடு செய்துள்ளன. தற்போது, இந்தப் பள்ளியிலான கல்வி தரம் முழு ச்சியாங் சூ மாநிலத்திலும் முன்னணியில் உள்ளது. An tou பள்ளியின் தலைவர் he xiao hei கூறியதாவது

எமது An tou பள்ளியின் கல்வி தரம் படிப்படியாக மேம்பட்டு வருகின்றது. 2007ம் ஆண்டு மேல் நிலை பள்ளியில் 90 விழுக்காடு மாணவர்கள் சோர்க்கப்பட்டுள்ளனர். சுமார் 40 விழுக்காட்டு மாணவர்கள் தரமான முக்கிய பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். கல்வி தரம் நகரத்திற்கு இணையானது என்ற இலக்கை எட்டியுள்ளது என்றார் அவர்.

An tou பள்ளியின் 9வது வகுப்பு 5வது பிரிவைச் சேர்ந்த wan yu ling எனும் மாணவி, மகிழ்ச்சியுடன் கூறியதாவது,

தற்போது, எமது பள்ளியில் ஒவ்வொரு வகுப்பறையிலும் வெப்ப மற்றும் குளிரூட்டி வசதிகள் உள்ளன. கணினி பாடம் கற்றுக்கொள்ள, ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு கனிணி வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் எல்லோரும், தங்களால் இயன்ற அளவு நன்றாகப் பாடம் கற்பிக்கின்றனர். பட்டம் பெற்ற பின், ஒரு மாநில நிலை முக்கிய மேல்னிலை பள்ளியின் தேர்வில் வெற்றி பெற முடியும் என்றும் நம்புகின்றேன் என்றார் அவர்.

1 2 3