Bai ta துவக்கப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் he chun hua இத்தகைய நடவடிக்கையில் கலந்து கொண்டார். Jin tan நகரிலுள்ள chang sheng துவக்கப் பள்ளியில் 6 திங்கள் கால சீன மொழில் பாடம் கற்றுக்கொடுக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. நகர பள்ளிகளில் பல கல்வி கருத்துக்களும் வடிவங்களும் கற்றுக்கொள்ள முடிகின்றது.
இங்குள்ள கல்வி மூலம், மிகப் புதிய கல்வி கருத்துக்களைக் கற்றுக்கொண்டுள்ளேன். ஒரு அனுபவமிக்க ஆசிரியருடன் பாடம் பற்றி ஆய்வு மேற்கொண்டேன். இந்த முன்னேறிய கல்வி கருத்தையும், சிறப்பான பணி மனப்பாங்கையும் கிராமத்துக்குக் கொண்டு திரும்புவேன். கிராம மாணவர்களுக்கு மேலும் சிறப்பான கல்வி வழங்கி, அவர்கள் நல்ல வளர்ச்சி வாய்ப்பு பெற செய்ய பாடுபடுவேன் என்றார் அவர்.

ச்சியாங் சூ மாநிலத்தின் jin tan நகரம் கிராமக் கல்வி வளர்ச்சியின் ஒரு மாதிரியாகும். கடந்த சில ஆண்டுகளாக, சீன அரசு நிதி ஒதுக்கீட்டின் மூலம், கிராமப்புறங்களில் பள்ளிகளை நடத்தும் வசதிகளை மேம்படுத்துவது, துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் ஆசிரியர்களின் பயிற்சியை வலுப்படுத்தி, அவர்களின் பணி, கல்வி மற்றும் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்துவது, மாணவர்களின் கல்வி, நிலை முதலானவற்றின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவது, கிராமப்பள்ளிகளின் பாடங்களில் சீர்திருத்தம் மேற்கொள்வது ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. கிராமப்புறங்களில் கட்டாய கல்வி கட்டத்தில் மாணவர்களின் பாட நூல் உள்ளிட்ட பல்வகை கட்டணங்கள் நீக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் பள்ளியில் சேரும் விகிதமும் உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில், கிராமப்புறங்களிலான கட்டாய கல்வி துறையில் அரசு மேலும் அதிகமான ஒதுக்கீடு செய்து, கிராமக் குழந்தைகளுக்கு மேலும் சிறப்பான கல்வி வசதிகளை உருவாக்கும். 1 2 3
|