
வன் பொருட்களிலான மேம்பாட்டைத் தவிர, நகர பள்ளிகளின் முன்னேறிய கல்வி கருத்தை இந்நகரிலுள்ள கிராமப் பள்ளிகள் ஆக்கப்பூர்வமாகக் கற்றுக்கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, மாணவர்களின் தனிச்சிறப்புக்கிணங்க, பல்வகை ஆய்வ வகுப்புகளை நடத்துவது இவற்றில் அடக்கம். Bai ta துவக்கப் பள்ளியில் டாள் கத்தரிப்பு வகுப்பு மாணவர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பள்ளியிலான சிறப்பான கண்காட்சி அறையில் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட அழகான தாள் கத்தரிப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை, Bai ta துவக்கப் பள்ளியின் மாணவர்களின் தாள் கத்தரிப்புகள் நாடு மற்றும் பல்வேறு மாநில நிலை போட்டிகளில் பல பரிசுகள் வென்றுள்ளன. நுண் கலை கல்வியில் ஈடுபடும் ஆசிரியர் cao yu jiao அம்மையார் கூறியதாவது
எமது பள்ளியில், மாணவர்களின் ஆர்வத்தால், தாள் கத்தரிப்பு பாடம் முதல், சிறப்பான பண்பாடு கல்வி வரை வளர்ந்துள்ளது. 2007ம் ஆண்டு, நகர தாள் கத்தரிப்பு ஆய்வகத்தின் உதவியுடன், இது பற்றிய பாட நூலை எழுதியுள்ளோம் என்றார் அவர்.
6வது வகுப்பைச் சேர்ந்த li jia rui எனும் மாணவர் இந்தப் பாடத்தை மிகவும் விரும்புகின்றார். அவர் கூறியதாவது
3வது வகுப்பு முதல், தாள் கத்தரிப்பு தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ளத் துவங்கினேன். இதை மிகவும் விரும்புகின்றேன். விளையாடும் பறவைகள் என்ற எனது படைப்பு 8வது தேசிய குழந்தைகள் கலை கல்வி கண்காட்சியில் பரிசு பெற்றது என்றார் அவர்.

கிராமப் பள்ளிகளின் வேகமான வளர்ச்சியைத் தூண்டும் வகையில், jin tan நகரில், நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையிலான ஆசிரியர் பரிமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2007ம் ஆண்டு இலையுதிர் கல்வி காலம் தொடங்கி, இந்நகரில் 50 தலை சிறந்த நகர ஆசிரியர்களும், 50 கிராம ஆசிரியர்களும் பரிமாற்றம் செய்யப்படுகின்றனர். 4 ஆண்டு காலத்தில், நகரின் சிறந்த இளம் ஆசிரியர்களை கிராமப் பள்ளிகளில் குறைந்தது ஓராண்டு கால கற்பிக்கும் அனுப்பவத்தை மேற்கொண்டு, கிராம ஆசியர்களுக்கு நகரங்களில் பயிற்சி பெற வாய்ப்பும் கிடைக்க ஏற்பாடு செய்ய போவதாக Jin tan நகரின் கல்வி பணியகத்தின் தலைவர் lid a கூறினார். அவர் கூறியதாவது
ஆசிரியர்களின் பரவலிலான சரி சமனற்ற நிலை நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையில் கல்வி வளர்ச்சி சமமாக வளர்க்க முடியாததற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். நகரங்களிலான தரமான பள்ளிகள், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிறந்த ஆசிரியர்களை கிராமத்துக்கு ஓராண்டு கல்விப்பணிக்காக அனுப்ப வேண்டும் என்று கோரியுள்ளோம். இவ்வாறு கிராமப்புறங்களில் கட்டாய கல்வி காலத்திலான ஆசிரியர் தரக்கட்டுமானத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
1 2 3
|