• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-22 16:23:21    
Muhammed Shahinஐப் பேட்டி காண்பது

cri
அரபு உலகம் மற்றும் ஆப்பிரிக்காவின் பெரிய விளையாட்டு நாடு என்ற முறையில், எகிப்து, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் வகையில், 177 பேர் இடம் பெறும் ஒலிம்பிக் பிரதிநிதிக் குழுவை அனுப்பியுள்ளது. பெய்ஜிங் வந்தடைந்துள்ள எகிப்து ஒலிம்பிக் பிரதிநிதிக் குழுவின் தலைவர் Muhammed Shahin அண்மையில் ஒலிம்பிக் கிராமத்தில், எமது செய்தியாளருக்குச் சிறப்புப் பேட்டியளித்தார்.

எகிப்து ஒலிம்பிக் பிரதிநிதிக் குழுவில், 69 விளையாட்டு வீரர்களும், 31 வீராங்கனைகளும் இருக்கின்றனர். அவர்கள், மற் போர், குத்துச் சண்டை, 5 தடகள விளையாட்டுகள் அடங்கிய பென்டத்லான் போட்டி முதலிய 18 விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வர். இவ்வெண்ணிக்கை, எகிப்து வரலாற்றில் ஒலிம்பிக் பிரதிநிதிக் குழுவின் அளவில் மிகப் பெரியதாக இருக்கிறது. ஆப்பிரிக்கா மற்றும் அரபு உலகில் முதலிடம் வகிக்கிறது என்று அவர் கூறினார். தங்கப் பதக்கத்தைப் பெறக் கூடிய போட்டிகள் பற்றி, அவர் கூறியதாவது,

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், குறிப்பாக கடந்த 4 ஆண்டுகாலத்தில் எகிப்து மேம்பாட்டைக் கொண்ட போட்டிகளில் சில பதக்கங்களைப் பெற வேண்டும் என்று எகிப்து பிரதிநிதிக் குழு விரும்புகிறது என்றார் அவர்.

எகிப்து, சீனாவுடனான பாரம்பரிய நட்புறவால், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தகுதியைப் பெற்ற விளையாட்டு வீரர்கள் அனைவரும், பெய்ஜிங்குக்குச் சென்று, போட்டியில் கலந்து கொள்வர். அதற்காக, எகிப்து ஒலிம்பிக் குழு இம்முறை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்கான முழுமையான ஆயத்தப் பணிகளையும் மேற்கொள்வதாக அவர் பலமுறை வலியுறுத்தினார். ஆனால், ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் எகிப்து பிரதிநிதிக் குழுவுக்கு ஒரே ஒரு தங்கப்பதக்கத்தை ஈட்டிதந்த ஆடவர் மற்போர் வீரர் கராம் ஜபிருக்கு, அண்மையில் பல்கேரியாவில் நடைபெற்ற தகுதிப் போட்டியில் குணமடைந்திருந்த காயம் மீண்டும் ஏற்பட்டது. என்றாலும் அவர் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வார் என்று Shahin தெரிவித்தார்.

தற்போது கிடைத்த மருத்துவச் சிகிச்சை அறிக்கையின்படி, ஜபிர் முற்றிலும் நலமடைந்துள்ளார். தற்போது அவர் ருமேனியாவிலிருந்து புறப்பட்டு, பெய்ஜிங் சென்றடைந்துள்ளார். இம்முறை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், அவர் தலைசிறந்த, நிதானமான மன நிலையுடன் போட்டியில் கலந்து கொள்வார் என்று Shahin கூறினார்.

1 2 3