
பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் பொது கவனம் செலுத்தும் பெய்ஜிங்கின் காற்றுத் தரம் பற்றியும் உணவுப் பொருட்களின் பாதுகாப்பு பற்றியும், அவர் கூறியதாவது,
எகிப்து பிரதிநிதிக் குழுவினரில் சிலர், பெய்ஜிங் வந்தடைந்துள்ளனர். அவர்களில் காற்றுத் தரம் மற்றும் காற்று மாசுபாடு குறித்து முறையீடு செய்வோர் எவருமில்லை. ஒலிம்பிக் கிராமத்தில் பல்வகை உணவுப் பொருட்கள் இருக்கின்றன. அதனால், பெய்ஜிங்கின் உணவுப் பொருட்கள் மீதான முறையீடுகள் ஏதுமில்லை என்றார் அவர்.
அவர் 6 முறை பெய்ஜிங்கில் பயணம் மேற்கொண்டுள்ளார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்குவதற்கு ஓராண்டுக்கு முன், அழைப்பின் பேரில், அவர் சீனாவில் பயணம் மேற்கொண்டார். அப்போது, தமது மனைவியுடன் சென்றிருந்த அவர், பெய்ஜிங்கில் அருமையான, சிறந்த காலம் அனுபவித்தார். சீன உணவுகளை அவர் பெரிதும் விரும்புகிறார். புகழ்பெற்ற பெய்ஜிங் பொரிக்கப்பட்ட வாத்து இறைச்சி மிகவும் விரும்புவதாக அவர் தெரிவித்தார். 1 2 3
|