பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் பணி பற்றி பேசிய போது, அவர் பாராட்டியதாவது,
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், இது, எனது 5வது முறை பங்கெடுப்பாகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்காக, சீனா மேற்கொண்டுள்ள முயற்சி, முன்னென்றும் கண்டிராதது என கூறலாம். அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை வலுப்படுத்தும் பொருட்டு, சீனா பிரம் மாண்டமான விளையாட்டரங்கங்களையும் திடல்களையும் கட்டியமைத்து, எங்களிடம் ஆயத்தப் பணி பற்றி காலதாமதமின்றி எடுத்துக் கூறி வருகிறது. இவை எல்லாம், நான் கலந்து கொண்டுள்ள கடந்த சில ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் காணப்படவில்லை. தவிர, பெய்ஜிங் மாநகரத்தில் குறிப்பிடத்தக்க, ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் காணப்பட்டுள்ளன. அதனால், இவ்வொலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சாட்சியாக, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வரலாற்றில் மிகப் பெரியது என்று தாம் கருதுவதாக அவர் கூறினார்.
கடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை விட, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சீன மக்களின் உற்சாகம், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மிகப் பெரிய தனிச்சிறப்பாகும் என்று அவர் கருதுகிறார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு, சீன மக்களை, ஒலிம்பிக்கில் வெற்றிகரமாகக் கலந்து கொள்ளச் செய்துள்ளது. ஓட்டுனர்கள், பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள், கடைகளில் பணிபுரிவோர் முதலியோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றிய நடவடிக்கைகளில் ஆக்கப்பூர்வமாக கலந்து கொண்டுள்ளனர். அது ஒலிம்பிக் கருத்தைப் பரவல் செய்து, பொது மக்கள் இந்நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் ஊக்கத்தை அணிதிரட்டுவதற்குத் துணை புரியும் என்று அவர் தெரிவித்தார்.
1 2 3
|