• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-24 23:29:15    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா அ

cri
நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்ற பாடல், ஒலிம்பிக் பண்ணாகும். பெய்சிங் நேரப்படி இன்று இரவு, இப்பாடல் பெய்சிங்கிலுள்ள பறவை கூடு விளையாட்டு அரங்கில் மீண்டும் இசைக்கப்பட்டது. 16 நாட்கள் நீடித்த 29வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இங்கே இனிதாக நிறைவடைந்தது.

கடந்த 16 நாட்களில் 204நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் சிறந்த சாதனையில் மென்மேலும் வேகமாக, உயர்வாக, வலிமையாக என்ற ஒலிம்பிக் எழுச்சியை போதியளவில் வெளிப்டுத்தியுள்ளனர். அவர்கள் தங்கள் செயல்பாடுகளின் மூலம், பங்கெடுப்பு என்பது வெற்றி பெறுவதை விட மிக முக்கியமானது என்ற ஒலிம்பிக் எழுச்சியை பன்முகங்களிலும் வெளிக்காட்டியுள்ளனர். அவர்களின் ஆதரவு மற்றும் முயற்சிகள் மூலம், ஓர் உலகம் ஒரு கனவு என்ற பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் குறிக்கோள் நனவாக்கப்பட்டது.

இன்றிரவு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மீதான அதிக விருப்பம், உச்ச நிலையை எட்டியுள்ளது. மாபெரும் நிறைவு விழாவின் மூலம், மக்கள் கண்கவர் காட்சிகளோடு விளையாட்டு போட்டிகளை கண்டுகளித்த 16 நாட்களை நினைவு கூர்ந்து, அமைதி மற்றும் நட்புறவு பாடலை கூட்டாக பாடினர்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, ஒரு விளையாட்டுப் போட்டி விழாவாகவும், அமைதி மற்றும் நட்புறவு விழாவாகவும் அமைந்திருந்தது என்று பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தலைவர் திரு லியு ச்சி நிறைவு விழாவில் கூறினார். அவர் கூறியதாவது

கடந்த 16 நாட்களில், உலகின் 204 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் விளையாட்டு வீரர்களும் வீராங்கணைகளும், தலைசிறந்த போட்டி ஆற்றலையும் நன்னடத்தையையும் வெளிப்படுத்தி, சிறந்த விளையாட்டுச் சாதனைகளை உருவாக்கினர். வேறுபட்ட நாடுகள், பிரதேசங்கள், தேசிய இனங்கள் மற்றும் நாகரிகங்களைச் சேர்ந்த ஒற்றுமை, நட்புறவு ஆகியவை படைத்த ஒலிம்பிக் குடும்பத்தை உருவாக்கி, புரிந்தணர்வை அதிகரித்துள்ளனர். விரும்தோம்பல் மிக்க சீன மக்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றி, மாசற்ற ஒலிம்பிக், அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக், மானுட மைய ஒலிம்பிக் ஆகியவற்றை நனவாக்கி, செழுமையான மாபெரும் பண்பாட்டு மற்றும் விளையாட்டுச் செல்வத்தை விட்டுச் சென்றனர் என்றார் அவர்.

நிறைவு விழாவில், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெற்றுள்ள சாதனையை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ரோக் வெகுவாகப் பாராட்டினார். அவர் கூறியதாவது

சீன மக்களுக்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கும் பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மூலம், உலகம், சீனா பற்றி மேலும் அறிந்து கொண்டுள்ளது. சீனாவும் உலகம் பற்றி மேலும் அறிந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு விளையாட்டு வீரரும் உண்மையான முன் மாதிரியாவார். நாடு திரும்பிய பிறகு, ஒலிம்பிக் எழுச்சியை தலைமுறை தலைமுறையாக பரவல் செய்ய பாடுபடுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார் அவர்.

1 2 3