பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற இறுதியில் அனுமதிக்கப்பட்ட ஈராக் பிரதிநிதிக் குழுவின் 7 விளையாட்டு வீரர்கள், 29வது கோடக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொண்ட போது, மக்களின் ஆரவார வரவேற்பை பெற்றனர். ஒலிம்பிக் போட்டி விவகார ஒருங்கிணைப்புக்கு பொறுப்பான ஈராக் அதிகாரி Sarhad Fatah கூறியதாவது
சீனா மற்றும் வெளிநாடுகளின் செய்தியாளர்களும் உலக மக்களும், ஈராக் பிரதிநிதிக் குழுவுக்கு கவனம் செலுத்தியுள்ளனர். ஈராக்கின் சூழ்நிலை மோசமாக இருந்தபோதிலும், விளையாட்டு வீரர்கள் பல இன்னல்களையும் தடைகளையும் சமாளித்து, பயிற்சி பெறுவதில் ஊன்றி நின்று, தனது தாய்நாட்டின் சார்பில் போட்டியில் பங்கெடுத்தனர். அவர்களால், ஈராக் பெருமையடைகின்றது. வெளிநாட்டினர் அவர்களை உயர்வாக பாராட்டினர்.
ஆப்கானிஸ்தான் பிரதிநிதி குழுவின் ஒரே ஒரு வீராங்கனையாக, Rubina Muqimyar அம்மையார், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தனது இலக்கை நனவாக்கியுள்ளனார்.
Solomon தீவுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரான Hale Wendyக்கு மகளிர் 58 கிலோ எடைக்கு குறைவானோர் பிரிவின் பளுதூக்குதல் போட்டியில் இறுதியிடம் கிடைத்தது. ஆனால், அவர் வருத்தம் அடையவில்லை. அவர் கூறியதாவது
பெய்சிங்கிற்கு வந்தது எனக்கு பெருமை. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிப் பயணத்தை பெருமையுடன் மேற்கொண்டுள்ளேன். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தான், நான் முதன்முறையாக கலந்து கொண்ட ஒலிம்பிக் போட்டியாகும் என்று அவர் குறிப்பிட்டார். 1 2 3
|