மென்மேலும் வேகமாக, உயர்வாக, வலிமையாக என்பது தான் ஒலிம்பிக் எழுச்சியாகும். கடந்த 16நாட்களில், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 302 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பல புதிய உலக சாதனை பதிவுகளும் ஒலிம்பிக் சாதனை பதிவுகளும் ஏற்படுத்தப்பட்டன. மனித குலம் தனது சாதிக்கும் எல்லையை கடந்து முன்னேறி சென்று கொண்டிருப்பதை இது காட்டுகிறது.
ஆகஸ்ட் 13ம் நாள் பிற்பகல், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 69 கிலோ எடைக்கு குறைந்த மகளிர் பளுதூக்குதல் போட்டியில், சீன வீராங்கனை லியு சுன்ஹொங் தங்கப் பதக்கம் பெற்றார். மேலும், அவர் தொடர்ந்து 5 முறை உலக சாதனை பதிவை முறியடித்தார். இது பற்றி, லியு சுன்ஹொங் கூறியதாவது
2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, பளுதூக்குதல் போட்டியில் இறுதி வாய்ப்பைக் கைவிட்டேன். இந்த போட்டியின் போது இறுதி வாய்ப்பில் வெற்றி பெற்றதால், நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், பல விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் வேறுபட்ட புதிய சாதனை பதிவுகளை உருவாக்கினர். 10 மீட்டர் மகளிர் குழல் துப்பாக்கி சுடும் போட்டியில், செக் குடியரசின் வீராங்கனை Katerina Emmons புதிய ஒலிம்பிக் சாதனை பதிவை உருவாக்கியதோடு, பெய்சிங் ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்கப் பதக்கம் பெற்றார். 200 மீட்டர் மகளிர் மல்லாந்த பாணி நீச்சல் போட்டியில், சிம்பாபுவே வீராங்கனை Kirsty Coventry புதிய உலக சாதனை பதிவை உருவாக்கி, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டின் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற முதல் ஆப்பிரிக்க வீராங்கனையானார் என்பது குறிப்பிடத்தக்கது. 10 மீட்டர் ஆடவர் குழல் துப்பாக்கி சுடும் போட்டியில், இந்திய விளையாட்டு வீரர்,Abhinav Bindra தங்கப் பதக்கம் பெற்றார். இது, ஒலிம்பிக் தனிநபர் விளையாட்டுப் போட்டியில் இந்தியா பெற்ற முதல் தங்கப் பதக்கமாகும்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற நீச்சல் விளையாட்டு வீரர் Michael Phelps கூறியதாவது
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தங்கப் பதக்கம் பெறுவது, நமது வாழ்வு முழுதும் உடனிருக்கும்.. முழு வாழ்விலும், நாம் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பெற்றவர்களில் ஒருவராக இருப்போம் என்று அவர் கூறினார்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், Michael Phelps மொத்தம் 8 தங்கப் பதக்கங்களைப் பெற்றார். அதே வேளையில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வரலாற்றில் மிக அதிகமான தங்கப் பதக்கங்களைப் பெற்ற விளையாட்டு வீரராகவும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மிக அதிகமான தங்கப் பதக்கங்களை பெற்ற ஒரே விளையாட்டு வீரராகவும் Michael Phelps மாறினார். அவரது பெயர், நிரந்தரமாக பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பத்தாயிரத்துக்கு அதிகமான விளையாட்டு வீரர்களில் 302 தங்கம் மற்றும் இதர பதக்கங்களை, விளையாட்டு வீரர்களில் சிறுபகுதியினர் தான் பெற முடியும். ஆனால், பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் மிகவும் ஆர்வமாக போட்டியில் பங்கெடுத்து, பெரும் முயற்சி மேற்கொண்டனர். அவர்கள் தங்களது செயல்பாடுகளின் மூலம், பங்கெடுப்பு என்பது தான் வெற்றி பெறுவதை விட மிக முக்கியமானது என்ற ஒலிம்பிக் எழுச்சியை நடைமுறைப்படுத்தியுள்ளனர். ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில், பங்கேற்றுள்ள வீரர்கள் என்ற பெருமையையும் பெற்றுள்ளனர்.
1 2 3
|