• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-25 10:29:54    
உலகிற்கு மாதிரியாகும் சீனா

cri
ஒவ்வொரு கோடையிலும் கோடை வெயில் கொளுத்துகிறது. ஆடிக்காற்று ஜீன் மாதமே அடிக்கிறது. மழைக்காலத்தில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. முன்பு இரு கரை தொட்டு ஓடிய ஆறுகள் இன்று வானம் பார்த்த மணற்பரப்புகளாய் காணக்கிடக்கின்றன. விவசாயம் செய்வதற்கல்ல சில வேளைகளில் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத நிலை. ஆனால் மந்றொரு புறமோ கட்டுக்கடங்கா வெள்ளம் திடீரென்று தோன்றி கடலில் கலக்கும் நிலை. இவை குறிப்பிட்ட ஒரு நாட்டில் ஏற்படுவதில்லை. உலகம் முழுவதும் காலநிலைகள் தடம் மாறிவிட்டன. புவி வெப்பமடைதலும் அதனுடன் பின்னிப்பிணைந்துள்ள காலநிலை மாற்றமும் தான் இதற்கு அடிப்படை. இது நாடுகளின் எல்லைகளை கடந்த உலகளாவிய பிரச்சனை.

இதற்கான தீர்வு முறைமைகளை ஆராய்ந்தால், காலநிலை மாற்றப் பிரச்சனையை எதிர்கொள்வதெப்படி? அதாவது அதன் பாதிப்புகளை குறைக்க என்ன செய்யலாம் என வழிதேடுவது ஒரு முறை. ஏற்கெனவே நாம் செய்துள்ள தவறுகளால் நிகழ்ந்துள்ள மாற்றங்களுக்கு தக்கவாறு நம்மை மாற்றிக்கொள்ளும் வழிகளை கண்டறிவது இன்னொரு முறை. நோய் வந்தபின் அதற்கு சிகிச்சையளித்து குணப்படுத்துவதை விட நோய் தடுப்பே சிறந்தது. எனவே பேரழிவுகளை சமாளிக்க தயாராவதை விட முன்னெச்சரிக்கையோடு அவற்றை தடுப்பது தான் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை பொறுத்தவரை நல்லதாகும். அதற்கு நீண்ட காலம் நீடிக்கின்ற வளர்ச்சி நடவடிக்கைகள் தான் இன்று அனைவருக்கும் மிகவும் தேவையாக உள்ளது.

இந்த இக்கட்டான நிலையை அறிந்துகொண்டு உலக நாடுகளில் வெளியாகும் பசுங்கூட வாயுக்களின் அளவை குறைக்க அந்தந்த நாடுகளின் உடனடி செயல்பாடுகள் மிகவும் தேவைப்படுகின்றன. உலக பொருளாதாரத்திலும் செயல்பாடுகளிலும் முக்கிய பங்காற்றிவரும் சீனா, இதற்காக செயல்படுத்திவரும் இரண்டு சுற்றுச்சூழல் தொடர்புடைய திட்டங்கள் பொதுவாக வெற்றியடைந்துள்ளதோடு, உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டான திட்டங்களாக மாறியுள்ளன. சீனா செயல்படுத்தி வரும் இயற்கையான காடுகளை அழியாமல் பாதுகாப்பது மற்றும் பசுமை திட்டத்திற்கு தானியம் ஆகியவையே உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் இரண்டு திட்டங்களாகும். இவை சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் முகமாக தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அண்மையில் இந்த இரண்டு திட்டங்களை பற்றிய ஆய்வொன்று நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் அமெரிக்க தேசிய அறிவியல் கழக இதழில் வெளியானது. சீனாவின் இயற்கையான காடுகளின் பாதுகாப்பு மற்றும் பசுமை திட்டத்திற்கு தானியம் என்ற இரண்டு திட்டங்களும் மிக சிறப்பாக செயல்படுவதோடு, இவை உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்குவதாக ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.

1 2 3