இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள் உலக மக்களின் நலனகளை பேணுவதால், தொடர்ந்து நடத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்காக பல்வேறு ஆலோசனைகளை ஆய்வுக்குழுவினர் வழங்கியுள்ளனர். நீர்மின் நிலையங்கள் மற்றும் அமெரிக்கா முதலிய பிற நாடுகளின் தொழில் துறை அன்பளிப்பாளர்களின் நிதி உதவிகளை பெற்று நிலையான நிதித் தொகை நிறுவப்படுவது நல்லது. மேலும் உள்ளூர் அரசுகள் மற்றும் விவசாயிகள் இன்னும் அதிகமாக இத்திட்டங்களில் பங்கு கொள்ளவும் தூண்டுமாறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இந்த இரண்டு திட்டங்களும் பெருமளவிலான சுற்றுச்சூழல் பிரச்சனைகளை சரியாக்குகின்ற, மனித நல்வாழ்க்கையை பேணுகின்ற முக்கியமாக குறிப்பிட்டு சொல்லப்படுகின்ற மாபெரும் முயற்சிகளாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் பல்வேறு துறைகளில் முன்னிலை வகிக்கும் சீனா சுற்றுச்சூழலை மேம்படுத்த உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்குவது, உலக இயற்கைச்சூழல் அமைவிற்கு ஆற்றும் முக்கிய பங்கை நமக்கு வெளிப்படுத்துகிறது. இது போன்ற திட்டங்கள் பிற நாடுகளில் செயல்பட தொடங்கினால் சீனாவே அதற்கு முன்மாதிரியாக இருக்கும். 1 2 3
|