சீனா 50,000 கோடி யுவான் அதாவது 7200 கோடி அமெரிக்க டாலர்களை செலவிட்டு செயல்படுத்திவரும் இந்த இரண்டு திட்டங்களையும் முன்னணி ஆய்வாளரும் மிச்சிகன் தேசிய பல்கலைக்கழகத்தின் அறிவியலாளருமான Liu Jianguo வும் இதர அறிவியலாளர்களும் ஆய்வு செய்தனர். உலகிலேயே மிக பெரியதான இவ்விரண்டு திட்டங்களும் சுற்றுச்சூழல் சிக்கல்களை எளிதாக்கி மக்கள் வாழ்கைக்கான மாற்று வழிமுறைகளை வழங்குவதாக மதிப்பிடப்படுகிறன.

இந்த இரண்டு திட்டங்களும் உலகளவில் அதிக செல்வாக்கு கொண்டுள்ளன. அதாவது இவற்றால் ஏற்படும் பயன்கள் சீனாவை மட்டும் சேருவதில்லை. உலக நாடுகள் அனைத்தும் பயன்பெறுகின்றன. தாவரங்கள் மற்றும் செடி கொடிகளின் பரவலாக்கம் அதிகரிக்கின்றது. கரி வெளியேற்றம் குறைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் மண்ணரிப்பு கட்டுப்படுத்தப்படுவதால் தூசி குறைகிறது. இவ்வாறு புவி வெப்பமடைவதற்கு எதிரான பல செயல்பாடுகள் இயற்கையாகவே நிகழ்கின்றன.
சீனா பல சுற்றுச்சூழல் பிரச்சனைகளை சந்தித்துள்ளது. 1998 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு 200 மில்லியன் மக்களை பாதித்தது. எனவே சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகளோடு தொடர்புள்ள சுற்றுச்சூழல் பிரச்சனைகளை கையாள்வது பற்றிய முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு தற்போது அதற்கான விலையை சீனர்கள் செலுத்தி வருகின்றனர். எனவே இது சீனாவின் புதிய வழிமுறை என்றே சொல்லலாம் என்கிறார் லியு.
இயற்கையான காடுகளை ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற கேள்வி நம்முள் எழலாம்? ஆனால் பல்லாண்டு காலமாக கட்டுபாடுகளின்றி கட்டவிழ்த்து விடப்பட்ட மரம் வெட்டுதலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் முயற்சியே சீனாவின் இந்த இயற்கையாக உள்ள காடுகளை அழிவிலிருந்து பாதுகாக்கும் திட்டமாகும். எறும்பு ஊர ஊர கல்லும் தேயும் என்பார்கள். தொடர்ந்து மரம் வெட்டப்படுமானால் காடுகள் முழுவதுமாக அழியும் நாள் நெருங்கி கொண்டு தான் வரும். மரம் வெட்டுதலால் மண்ணரிப்பு, பாண்டா உள்ளிட்ட உயிரினங்களுக்கான சுற்றுச்சூழல் சிக்கல், மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சனைகள் எழ தொடங்கின. காடுகளின் இயற்கையான வளத்தை சீராக்கி பாதுகாக்க, தற்போது மரம் வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு மரங்கள் பல நட்டு காடு வளர்போருக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு தூண்டுதலும் தரப்படுகிறது.

அடுத்ததாக பசுமை திட்டத்திற்கு தானியம் என்பது நிலப்பரப்புகளின் செங்குத்தான சரிவுகளில் உள்ள விளைநிலங்களை காடுகளாக மாற்றுவதாகும். ஏற்கெனவே அதனை விளைநிலமாக கொண்டு பயிர்செய்து வாழும் விவசாயிகளுக்கு தானியங்கள் மற்றும் மானியத்தொகை சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இரண்டு திட்டங்களும் சுற்றுச்சூழலுக்கும், சீன மக்களுக்காவும் தீட்டப்பட்டுள்ளது. உலக மக்கள் அனைவரும் இவற்றால் பயனடைகின்றனர். இத்தகைய திட்டங்களில் பிரச்சனைகள் இல்லாமலில்லை என்று லியுவும் அவர் சகாகக்ளும் குறிப்பிடுகின்றனர். எடுத்துகாட்டாக கூறினால், காடு பாதுகாப்பு திட்டம் பல மரம் வெட்டிகளின் வேலைவாய்ப்புகளை இழக்க செய்துள்ளது. மரம் வெட்டும் தொழில் துறையை நம்பிக்கொண்டிருந்த சில சிறு அரசுகளுக்கு நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.
1 2 3
|