• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-28 19:20:38    
ஒலிம்பிக் போட்டியில் கவனத்தை ஈர்க்கும் செய்திகள்

cri
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினரான போலாந்து வம்சாவழி இரெனா ஸெசிவின்ஸ்கா அம்மையார் ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் தங்க பதக்கம் பெற்ற சகநாட்டவர் மாஜீவ்ஸ்க்கியை கட்டித் தழுவி அன்புடன் முத்தமிட்டார். பின் 62வயதான இரெனா ஸெசிவின்ஸ்கா அம்மையார் மாஜீஸ்க்கியுடன் நிழற்படம் எடுத்துக் கொண்டார். எமது செய்தியாளர் அவரை பேட்டி கண்ட போது மாஜீஸ்க்கியை அவர் வெகுவாக பாராட்டினார். அவர் கூறியதாவது

 

அவர் மிகவும் சிறமையோடு போட்டியிட்டார். அவர் பெற்றுள்ள சாதனையும் மிக சிறப்பானது. போலாந்து பிரதிநிதி குழுவுக்காக அவர் முதலாவது தங்கப் பதக்கம் வென்றார். 14ம் நாள் வரை நாங்கள் பதக்கம் பெற வில்லை. 15ம் நாள் வாள் வீச்சு போட்டியில் வெள்ளி பதக்கத்தையும் தடகளப் போட்டியில் தங்க பதக்கத்தையும் பெற்றோம். நான் போலாந்து தடகளப் போட்டி அமைப்பின் உறுப்பினராக திகழ்கின்றேன். ஆகவே நான் அவர்களின் சார்பாக மகிழ்ச்சியை தெரிவிக்கின்றேன் என்று ஸெசிவின்ஸக்கா கூறினார்.

போலாந்தில் ஸெசிவின்ஸக்கா புகழ் பெற்ற தடகள விளையாட்டு வீராங்கனையாக அழைக்கப்படுகின்றார். 1964 முதல் 1980ம் ஆண்டு வரையான காலத்தில் அவர் 5 முறை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு 3 தங்கப் பதக்கங்களையும் 2 வெள்ளி பதக்கங்களையும் 2 வெண்கல பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டின் அழைப்பின் பேரில் மொழி பெயர்ப்புச் சேவையில் தொண்டராக பணிபுரிகின்ற அபேரா டி அகுக்னெஹு எத்தியோப்பியாவைச் சேர்ந்தவராவார். 60 வயதான அவர் பாலஸ்தீனத்தில் பிறந்தவர். தமது இளமைகாலத்தில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். சிறப்பாக வளர்க்கப்பட்டதால் மற்றவரை விட அவருக்கு வலிமையான மொழி திறன் உண்டு. எத்தியோப்பிய மற்றும் அரபு மொழி அவரது தாய்மொழியாகும். தவிரவும் அவர் பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளின் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவராவார்.

நற்குணமுடைய அவர் கடந்த 20க்கும் அதிகமான ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் புகழ்பெற்ற சர்வதேச பிரமுகர்களுடன் பழகியுள்ளார். அவரும் ஒலிம்பிக் கிராமத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றார். நினைவு பதக்கங்கள் தொங்கவிடப்பட்ட ஆயர்களுக்கான தொப்பி அவருடைய அடையாளமாக திகழ்கின்றது. பேட்டியளிக்கையில் அவர் லாஸ்எஞ்சல்ஸ், அட்லாண்டா, பார்சலோனா, ஏதென்ஸ் முதலிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் வெளியிடப்பட்ட ஒலிம்பிக் கிராமத்தின் செய்தியேடுகளில் அவர் பற்றிய தகவல்களை காட்டினார்.

1 2 3