1996ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற போது அகுக்னெஹு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விளையாட்டு வீரர்களுக்கான குழுவின் தேர்தல் பணிக்கு மொழி பெயர்ப்பு சேவை வழங்கினார். பின் ஒவ்வொரு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலும் விளையாட்டு வீரர்களுக்கான குழுவின் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக வாக்கெடுப்பு பெட்டியின் பக்கத்தில் நின்று அவர் விளையாட்டு வீரர்களுக்கு தேர்தல் பணியின் முக்கியத்தும் குறித்து விளக்கி கூறியுள்ளார்.

புனிதமான வாக்கெடுப்பு உரிமையை பயன்படுத்தும் வகையிலும் பல்வேறு நாட்டு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தேர்தல் கமிட்டி வாக்கெடுப்பில் பங்கெடுக்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் பூஃவா மங்கள சின்ன பொம்மையை அன்பளிப்பாக வழங்க தீர்மானித்துள்ளது. இந்த முயற்சி மிகவும் பயன்தருவதாக உள்ளது. வாக்கெடுப்பில் பங்கெடுத்துள்ள வீரர்களின் எண்ணிக்கை பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட வீரர்களின் எண்ணிக்கையில் 50 விழுக்காட்டை தாண்டியது என்று அவர் கூறினார்.
1 2 3
|