விளையாட்டுப் போட்டி தீவிரமாக நடைபெறும் அதேவேளையில் பெய்ஜிங் ஒலிம்பிக் ஏற்பாட்டு முயற்சிகள் பல்வேறு தரப்புகளால் பாரட்டப்பட்டுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிடியின் செய்தித் தொடர்பாளர் டேவிஸ் அம்மையார் கூறியதாவது.
28 வகை விளையாட்டுப் போட்டிகள் நடப்பு ஒலிம்பிக்கில் உள்ளன. 10 ஆயிரத்து 500 விளையாட்டு வீரர்கள் பங்கெடுக்கின்றனர். பதிவு செய்த 20 ஆயிரம் செய்தியாளர்களும் மிகப்பல இரசிகர்களும் கோலாகலமான விளையாட்டு விழாவில் கலந்து கொள்கின்றனர். நீங்கள் இங்கே விளையாட்டுப் போட்டிகளை இனிதாக கண்டு இரசித்த அதேவேளையில் இன்புற ஏற்பாட்டுப் பணிகள் சீராக நிறைவேற்றப்பட்டுள்ளதைக் கண்டு அறிவீர்கள். இதற்காக நாங்கள் மிகவும் மனநிறைவு அடைந்துள்ளோம் என்றார் அவர்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கென உருவாக்கப்பட்ட சிறந்த முறையில் போட்டியிடும் சூழல் குறித்து ஆஸ்திரேலிய பிரதிநிதிக் குழுவின் துணைத் தலைவர் பீட்டர் மொண்ட்கோமேரி கூறியதாவது.
நாங்கள் பெய்ஜிங் வருவதற்கு முன் சில பிரச்சினைகள் பற்றி கவலைபட்டோம். விளையாட்டு வீரர்களுக்கு பெய்ஜிங்கின் காலநிலையும் புதிய இடமும் பழக நாளாகும் என்பது எங்கள் கவலைகளில் ஒன்றாகும். உண்மையில் அதேமாதிரியான பிரச்சினை ஏற்படவில்லை. பெய்ஜிங் கால நிலை மற்றும் மாசுபாட்டு பிரச்சினை பற்றி நாங்கள் கவலைபட்டோம். ஆனால் இங்குள்ள நடைமுறை நிலைமை நாங்கள் நினைத்ததை விட சிறப்பாக உள்ளது. தட்பவெப்பம் அதிகமாக இருக்கும் எனவும் கவலைபட்டோம். ஆனால் வந்த பின் பெய்ஜிங் காலநிலை சில நாட்கள் மட்டுமே வெப்பமாக இருந்தது. ஏனைய நாட்கள் அதிக வெப்பமில்லாமல் இருந்தன என்று அவர் கூறினார்.
விளையாட்டு வீரர்கள் வரலாற்றில் மிக சிறந்த ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருக்கிறார்கள். உணவுப் பொருட்கள், போக்குவரத்து வசதிகள் தொண்டர்களின் சேவை முதலியவை சிறப்பாக உள்ளன. எங்கள் விளையாட்டு வீரர்கள் பெய்ஜிங்கில் மிக மகிழ்ச்சியாக உள்ளனர் என்று மொண்ட்கோமேரி கூறினார். 1 2 3
|