ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலகின் மிகப் பெரிய விளையாட்டு விழாவாகும். அதே வேளையில், அது, உலகில் அமைதியை நேசிக்கும் மக்களின் நட்புப்பூர்வமான விழாவாகும்.
19ம் வயதான நீச்சல் வீரர் ahmed adam, சூடானிலிருந்து வந்தவராவார். சூடான் உள்நாட்டுப்போர், ஏறக்குறைய அரை நூற்றாண்டாக நீடித்து வந்தது. சூடான் மக்கள், கடுமையான போர் காயத்தால் துன்புற்றனர். எனவே, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவக்கி வைத்த அமைதிக் கருத்துகளை, சூடான் வீரர்கள் ஆழமாக புரிந்து கொண்டனர். அவர் கூறியதாவது
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, பல்வேறு நாடுகளின் மக்கள் அனைத்து பிரச்சினைகளையும் ஒதுக்கி வைக்க வேண்டும். உலகின் பல்வேறு நாடுகள், வேறுபட்ட நகரங்களில் இருந்த போதிலும், ஒலிம்பிக் விளையாட்டுத் திடலில் அவற்றின் தேசிய கொடிகள், பறந்தன. அது, அமைதியின் சின்னமாகும். இணக்கம், பேச்சுவார்த்தை, அமைதி ஆகியவற்றை ஒலிம்பிக் எழுச்சி அழைத்தது.
1 2 3
|