2006ம் ஆண்டு ஈராக்கிலுள்ள விளையாட்டுத் துறையினர்களை கடத்தி சென்று கொன்ற பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்தன என்று ஈராக்கிலிருந்து வந்த தடகள வீராங்கனை dana abdel razak கூறினார். அவர் பல முறைகளில் தாக்கப்பட்டார். இவ்வாண்டு முதல், ஈராக் பாதுகாப்பு நிலைமை சிறப்பாக மாறிகின்ற போதிலும், மக்கள் நம்பிக்கை கொள்ள முடியாது. அவர் கூறியதாவது
ஈராக்கில் வாழ்ந்த மக்கள் அனைவரும் தாக்குதலால் பாதிக்கப்பட்டனர். ஏனென்றால், நாங்கள் போர் நிலைமையி்ல் வாழ்கின்றோம்.
மக்களை ஒன்றுபடுத்தி, போரை மறுக்கும் இயற்கை ஆற்றலை விளையாட்டு கொண்டது என்று dana abdel razakஉடன் சென்ற சீனாவிலுள்ள ஈராக் தூதரகத்தின் செய்தித்துறை அதிகாரி Shrhat Fatah கூறினார். வீரர்கள் சர்வதேசப் போட்டியில் கலந்து கொள்வதையும் வெளிஉலகத்துடனான ஈராக்கின் தொடர்பை துண்டிப்பதையும் அதிதீவிரவாதிகள் தடை செய்வது, வீரர்களை தாக்கும் அவர்களின் நோக்கமாகும். அவர் கூறியதாவது
வீரர்கள், மிக முக்கிய பங்கேற்கின்றனர். எனவே, அவர்கள், தீவிரவாதிகளின் முதல் இலக்காக மாறியுள்ளனர். ஆனால், வீரர்களின் அயராத முயற்சி மற்றும் திடமான மனவுறுதியால், முழு ஈராக்கும் அவர்களுக்கு எழுச்சி தருகின்றது. இந்த முறை பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அவர்கள் கலந்து கொள்வது குறித்து, நாங்கள் பெருமை அடைகிறோம்.
1 2 3
|