ஏறக்குறைய அரை நூற்றாண்டு நீடித்து வரும் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல், இரு தரப்பு மற்றும் அப்பிரதேசத்தின் இதர நாடுகளுக்கும் மக்களுக்கும் கடும் நாசம் ஏற்படுத்தியுள்ளது என்று பாலஸ்தீனத்திலிருந்து வந்த தடகளப் பயிற்சியாளர் Youssef Hamadna தெரிவித்தார். சீனாவின் நிதானத்தையும் செழுமையையும் நேரடியாகப் பார்த்த பிறகு, தமது நாடு, விரைவில் அமைதியை நனவாக்க வேண்டுமென்று பாலஸ்தீன வீரர்கள் ஆவலுடன் விரும்புவதாக அவர் கூறினார்.
1979ம் ஆண்டு முதல், ஏறக்குறைய 30 ஆண்டுகால போர், இப்போதைய உலகில் மிக வறுமையான பின்தங்கிய நாடுகளில ஒன்றாக ஆப்கானை மாற்றியுள்ளது. ஆப்கானின் மீது சர்வதேசச் சமூகம் கவனம் செலுத்தும் வாய்ப்பை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வழங்கியது என்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட ஆப்கான் விளையாட்டுப் பிரதிநிதிக் குழுவின் தலைவர் sayed mahmood zia dashti கூறினார். அவர் மேலும் கூறியதாவது
போரால் உலகம், ஆப்கானை மறந்து விடுகின்றது கடந்த சில ஆண்டுகளில், மோசமாகி வரும் பாதுகாப்பு நிலைமை, எனது தாய்நாட்டுக்கு பல பேரிழவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியினால் தான், ஆப்கான் உலகின் பல்வேறு நாடுகளின் பார்வைக்கு மீ்ண்டும் திரும்ப முடிந்தது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, இளைஞர்களுக்கு புதிய ஆசையை கொண்டுவர முடியும் என்று sayed mahmood zia dashti கூறினார். அவர் கூறியதாவது
பல்வேறு செய்தி ஊடகங்களின் மூலம், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் எமது வீரர்களின் தலைசிறந்த சாதனைகளை அறிந்து கொள்ளும் போது, ஆப்கான் இளைஞர்கள், தமது தாய்நாட்டின் மீது பெருமை அடைவார்கள். போரால் ஏற்பட்ட துயரங்களை அவர்கள் மறந்து விடுவார்கள். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, அவர்களுக்கு ஆசையை கொண்டுவந்துள்ளது என்றார் அவர். 1 2 3
|