• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-02 19:11:35    
ஒலிம்பிக்கும் சீனாவும்

cri
ஒலிம்பிக்கின் பிறப்பிடம் க்ரீஸ் என்றழைக்கப்படும் கிரேக்க நாடு என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. ஒலிம்பிக் விளையாட்டுகள், பண்டைக்கால ஒலிம்பிக் மற்றும் நவீன ஒலிம்பிக் என்று இரண்டு வரலாற்று காலக்கட்டங்களின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. கி.மு 776 ஆம் ஆண்டு முதல் கி.பி 393 ஆம் ஆண்டு வரை கிரேக்கத்தின் ஒலிம்பியா நகரில் நடந்தவை பண்டைக்கால ஒலிம்பிக் போட்டிகள். 1896 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெர்று வருபவை நவீன ஒலிம்பிக் போட்டிகள்.

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்கையில் பண்டைக்கால ஒலிம்பிக்கின் காலம் சீன வரலாற்றின் கிழக்கு ஷோ வம்சம் மற்றும் ஜின் வம்ச காலங்களை உள்ளடக்கியது எனலாம். சிங் வம்சகாலத்தின் குவாங் ஷு கட்டத்திலிருந்து இன்றைய சீன மக்கள் குடியரசு வரையான காலம் நவீன ஒலிம்பிக் காலமாகும்.

பட்டுப்பாதையின் மூலம் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலான வர்த்தக மற்றும் பண்பாட்டு பரிமாற்றங்கள் இரண்டாம் நூற்றாண்டு முதல் நடைபெற்றன. ஆனால், பண்டைக்காலத்தில் சீனாவுக்கும் கிரேக்கத்துக்குமிடையில் விளையாட்டு சார்ந்த எந்த தொடர்பும் இருக்கவில்லை. மறுபுறத்தில் நவீன ஒலிம்பிக்கை பார்க்கையில், அதன் ஆரம்ப காலக்கட்டத்திலிருந்தே சீனாவின் தொடர்பு இருந்துவந்துள்ளது. இதற்கு சீனாவும், கிரேக்கமும் விளையாட்டுத் துறையின் தோற்றம் மற்றும் வகைகளில் கொண்டுள்ள ஏறக்குறைய ஒரெ மாதிரியான அம்சங்களே காரணம் எனலாம். இவ்விரு நாடுகளின் சமூக அரசியல் வாழ்க்கையிலும், பண்பாட்டிலும் விளையாட்டு ஆழப்பொதிந்துள்ளது.

1 2 3