• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-02 19:11:35    
ஒலிம்பிக்கும் சீனாவும்

cri

பண்டைய காலத்தில் மனிதர்கள் இயற்கையோடு மட்டுமல்ல, தங்களுக்கிடையேயும் போரிடவே செய்தனர். ஆக விளையாட்டுக்கு இன்னொரு நோக்கமும் இருந்தது, எதிராளியை வீழ்த்தக்கூடியவர்களாக தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்வதே அந்த நோக்கம். சீனாவின் முன்னோடியாக, முதல் மூதாதையராக கருதப்படும் மஞ்சள் பேரரசரின் ஆட்சியின்போது, ஒரு பழங்குடியின போராளிக்குழுவின் தலைவனாக இருந்த ச்சியோ என்பவன், தனது வீரர்களை தலையில் மாட்டின் கொம்புகளை அணிந்து சண்டையிடுவதற்கு பயிற்சி அளித்தானாம். இதுவே பிற்காலத்தில் பல்வேறு வகையான மற்போருக்கு வழிகோலியதாக கூறப்படுகிறது. மற்போர், தற்காப்புக்கலை, வாள்வீச்சு, கல்லெறிதல், குதிரைப் பந்தயம், நீச்சல் மற்றும் வேட்டையாடுதல் என பலவகை போர்க்கலைகள் பண்டைய சீனாவின் ராணுவ பயிற்சியில் இடம்பெற்றன. வசந்தம் மற்றும் இலையுதிர்காலப்பருவ காலகட்டத்தில் வாழ்ந்த குவான் ஷுங் என்ற உயரதிகாரி, மூன்று ஆறுகளின் நீரை திசைதிருப்பி உருவாக்கிய நீச்சல் குளங்களை கட்டினார் என்றும், தனது "தண்ணீர் படையின்" வீரர்களில் சிறந்த நீச்சல் திறமை கொண்டவர்களும் பரிசுகள் வழங்கினார் என்று அறியப்படுகிறது. பண்டைய கிரேக்கத்தில் அவ்வப்போது நீச்சல் போட்டிகள் நடந்ததாக குறிப்புகள் உள்ளன. ஒரு புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் தனது பயிற்சியின் ஒரு பகுதியாக நீச்சலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

பண்டைய கிரேக்கத்தில் விலையாட்டு ராணுவ ரீதியான பயன்பாட்டிலும் துணைபுரிந்தது. கிரேக்கத்தின் ஸ்பார்ட்டாவில் இளம்வயது முதலே தீவிர ராணுவ பயிற்சிகள் வழங்கப்பட்டன. பண்டைய சீனாவிலும் அதே போன்று பயிற்சிகள் வழங்கப்பட்டன. போரிடும் நாடுகள் காலத்தில் சீன அரசர்களும், பேரரசர்களும் தங்களது அதிகாரிகளிடம் மக்களுக்கு குளிர்காலத்தில் வில்வித்தை, தேரோட்டுதல் மற்றும் மற்போரை கற்றுத்தர பணித்தனர். மட்டுமல்ல, மக்களனைவரும் நாள்தோரும் ஆறுமணி நேரம் விவசாயத்திலும், இரண்டு மணி நேரம் ராணுவ பயிற்சியிலும் ஈடுபடுமாறு பணிக்கப்பட்டனர்.

பண்டைய சீன மற்றும் கிரேக்க நாகரிகங்கள் விளையாட்டுத் துறையில் பொதுவாகக் கொண்ட மற்றொரு அம்சம், விளையாட்டோடு கலந்த நடனமாகும். சிங்காய் மாநிலத்தின் டாதுங் வட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட நவகற்கால பாத்திரம் ஒன்றின் உட்பகுதியில் நடனமாடும் மூன்று குழுவினரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் சீனாவில் தொடர் மழையும் வெள்ளமும் வந்ததால் மக்கள் அவதிப்பட்டனர் என்றும், வேலை ஏதும் செய்யாததால் சோர்ந்துபோன எலும்புகளையும் தசைகளையும் முறுக்கேற்றவும், மனச் சோர்வை போக்கவும் அவர்கள் நடனமாடினர் என்று அறியப்படுகிறது. கிரேக்கத்தின் ஸ்பார்ட்டாவிலான ராணுவ பயிற்சியிலும் நடனம் ஒரு பகுதியாக இருந்ததாம். பொதுவாக உடற்பயிற்சிக்கும் நடனத்துக்கும் அவ்வளவு பெரிய வேறுபாடுகள் இல்லைதானே. இன்றைக்கு நாம் காணும் ஜிம்னாஸ்டிக்ஸ் எனும் சீருடற்பயிற்சி, பனிச்சறுக்கு நடனம் போன்றவை நடனம் போன்ற விளையாட்டுக்களே.


1 2 3