• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-02 19:11:35    
ஒலிம்பிக்கும் சீனாவும்

cri

இன்றைக்கு நாம் ஒலிம்பிக்கில் காணும் விளையாட்டுகள் உள்ளடங்கிய அனைத்து விளையாட்டுகளுக்கும் பின்னணியில் மனிதகுலத்தின் அடிப்படை வாழ்க்கைத் தத்துவமும் வரலாறும் அடங்கியுள்ளது எனலாம். இன்றைக்கு மனிதர் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகள் மற்றும் சில விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். பழங்கற்காலத்தில் மனிதர்கள் உணவு சேகரிப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர். அதற்கு அவர்கள் பல கருவிகளை உருவாக்கினர். கற்கோடரி, கொக்கி, உருண்டைகள், வலைகள், ஈட்டுகள் என பலவகை கருவிகளைக் கொண்டு மனிதர்கள் வேட்டையாடினர். கருவிகளை திறமையாக கையாளவும் பழகினர். வலிமையான உடலும், வேகமான ஓட்டம் மற்றும் விரைவான நீச்சலும்தான் வேட்டையாடுதலுக்கு உதவும் என்பதை உணர்ந்துகொண்டு அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக்கொண்டனர். தூரமாகவும், துல்லியமாகவும் ஈட்டிகள் உள்ளிட்ட கருவிகளை எறிந்தால்தான் வேட்டைக்கான இலக்கை வீழ்த்தமுடியும் என்பதை அனுபவத்தால் அறிந்துகொண்டனர். இவையெல்லாம் ஓட்டம், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், நீச்சல், அம்பெறிதல், வட்டெறிதல் போன்ற விளையாட்டுக்களுக்கு அடிப்படையாயின. சீனாவின் ஷான்சி மாநிலத்தின் காவ்யாங் வட்டத்திலான் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கபட்ட கல் உருண்டைகள் அல்லது பந்துகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக கருதப்படுகிறது. வேட்டையாடுதலுக்காக மட்டுமல்ல அக்காலத்து மனிதர்கள் இன்றைய குண்டெறிதல் விளையாட்டு போல், இந்த உருண்டைகளை வீசி விளையாடியும் இருக்கலாம். வில்வித்தை போட்டி இன்றைக்கு ஒலிம்பிக்கில் பரவலான வரவேற்பை பெற்ற ஒரு விளையாட்டு. பல்வேறு நாடுகளின் பழங்கதைகளில் வில்வித்தை பற்றி கூறப்படுகிறது. தன் மனைவியின் மீது நாட்டம் கொண்டவர்களை ஒடீசியஸ் தன் அம்புகளால் கொன்றதாக கிரேக்கத்தில் கூறப்படுகிறது. சீனாவிலும் முன்பொரு காலத்தில் வானத்தில் 10 சூரியன்கள் சுட்டெரித்து பூமியை அழித்துக்கொண்டிருந்தபோது, ஹோ யி என்ற வில்வித்தையாளன், தன் அம்புகளால் 9 சூரியன்களை வீழ்த்தியதாக ஒரு பழங்கதை உண்டு.

1 2 3