• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-04 10:08:32    
மேலும் கூடுதலான சமூக கடப்பாட்டை ஏற்றுக் கொள்ளும் புதிய நெறி

cri

திமிழன்பன்.........அவர்கள் முக்கியமாக எந்த துறைகளில் பணிபுரிகன்றனர்?

கலை.........சீனப் பொருளாதாரம் சமூக வாழ்க்கை ஆகியவை இடம் பெறும் பல துறைகளை அவர்கள் தேர்வு செய்து வேலை செய்கிறார்கள்.

திமிழன்பன்........8ம் நாள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களை சந்திக்கும் கூட்டத்தில் அவர்கள் எப்படி கருத்து தெரிவித்தார்கள்?

கலை.........சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் புதிய உறுப்பினர் wang jian lin அரசுசாா தொழில் நிறுவனங்களின் கருத்தை தெரிவிக்கிறார்.

திமிழன்பன்........சமூக கடப்பாடு அனைத்து தொழில் முனைவோர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய பொது பிரச்சினையாகும். இதனை செயல்படுத்த வேண்டும்.

கலை.........அடுத்து உறுப்பினர் xu guan ju கூட்டத் தொடருக்கு கொண்டு வந்த கருத்துரு தொழில் நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டிய சமூக கடப்பாடாகும். அவருடைய கருத்தை கேளுங்கள்.

திமிழன்பன்........கூட்டத் தொடரில் நான் முன்வைக்கின்ற ஒரு கருத்துரு தொழில் நிறுவனங்கள் சமூக கடப்பாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டிய வரையறை அமைப்பு முறையின் கட்டுமானத்துடன் தொடர்புடையது. இதன் கட்டுமானத்தின் மூலம் சோஷலிச இணக்க சமூகத்தை கட்டியமைப்பதை முன்னேற்றுவதற்கு தொழில் நிறுவனங்கள் பங்கு ஆற்றலாம்.

கலை.......தற்போது சீன சமூக தட்டில் காணப்பட்ட புதிய .பிரிவில் சுமார் 5 கோடி மக்கள் உள்ளனர். அவர்கள் கட்டுபடுத்தியுள்ள அல்லது நிர்வகித்துள்ள மூல தனம் சுமார் 10 லட்சம் கோடி யுவானை எட்டியது. அவர்கள் நாட்டின் பாதி தொழில் நுட்ப காப்புரிமை பெற்றுள்ளனர்.

திமிழன்பன்........ அவர்களின் எண்ணிக்கையையும் ஆற்றலையும் பார்த்தால் அவர்கள் இப்போது சீன பொருளாதார கட்டுமானத்திலும் சமூக வளர்ச்சியிலும் மிக முக்கிய சக்தியாக கருதப்படுகின்றனர்.

கலை.........ஆமாம். அவர்கள் சுயவிருப்பத்துடன் சமூக கடப்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

1 2 3