திமிழன்பன்........உதாரணங்களை எடுத்து கூறுங்கள்.
கலை.........மகிழ்ச்சி. சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டி உறுப்பினரும் தொழில் முனைவோருமான liu ying xia அம்மையார் இது ப்ற்றி கூறியதாவது.
புதிய சமூகத் தட்டு பிரிவினர்கள் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்பு பணி நடைமுறைபடுத்தப்பட்ட 30 ஆண்டுகளின் நலன்களை முதன்முதலாக அனுபவிப்பார்களாவர். அவர்கள் முதன்முதலாக செலவமடைந்துள்ளனர். ஆகவே சமூகத்தின் கடப்பாட்டை துணிவுடன் ஏற்க வேண்டும். முதன்முதலில் நாங்கள் நடத்தும் தொழில் நிறுவனங்களில் வறுமை மற்றும் செழுமை இடைவெளியை ஒழிப்பது தொடர்பான அரசின் பல்வகை கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும். தொழில் நிறுவனங்களை நன்றாக நடத்தும் அதே வேளையில் ஏழை மக்களுக்கு உதவும் துறையில் உற்சாகத்துடன் பங்கெடுக்க வேண்டும்.
திமிழன்பன்........ சமூக கடப்பாட்டை எப்படி ஏற்க வேண்டும்?நிவாரண துறையில் ஈடுபடுவது போதுமா?
கலை.........நீங்கள் கேட்டது சரிதான். உருப்படியான நிவாரண வழங்குதல் ஒரு வடிவம். மேலும் கூடுதலாக செய்ய வேண்டியது பற்றி புகழ் பெற்ற தொழில் முனைவோர் zhao man tang தெரித்த கருத்தை கேளுங்கள்.
திமிழன்பன்........நாங்கள் முதலில் தொழில் நிறுவனங்களை செவ்வனே நடத்த வேண்டும். அவற்றை பெரிதாகவும் வலிமையாகவும் நடத்த வேண்டும். இந்த முன்னேற்ற போக்கில் சமூகக் கடப்பாட்டை கூடுதலாக ஏற்பது இயல்பே. எடுத்துக்காட்டாக சமூகத்திற்கு மேலும் கூடுதலான வேலை வாய்ப்புகளை வழங்குவது நாட்டுக்கு மேலும் கூடுதலான வரி செலுத்துவது என்பன நாங்கள் செயல்ப்படுத்தக் கூடிய முயற்சியாகும் என்று அவர் கூறினார்.
கலை.........இப்போது சீனாவில் அரசியல் விவகாரங்களில் பங்கெடுப்பதில் புதிய சமூகத்தட்டுப் பிரிவினர்கள் மேன்மேலும் முக்கிய பங்கு ஆற்றியுள்ளனர். நடப்பு மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டி உறுப்பினர்களில் தொழில் முனைவோர் வழக்கறிஞர்கள் கணக்காளர்கள் தொழில் முறை முதலீட்டு வங்கியாளர்கள் போன்ற புதிய சமூகத் தட்டுப் பிரிவினர்கள் இடம் பெறுகின்றனர். தேசிய கமிட்டி உறுப்பினர்களாக பணி புரியுள்ளனர். மாநாட்டின் உறுப்பினரும் நடப்பு TCL குழுமத்தின் நிர்வாக இயக்குனருமான han fang ming சமூகத்தின் கடப்பாடு பற்றி கருத்து தெரிவித்தார்
திமிழன்பன்.......புதிய சமூக தட்டு பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும். நாட்டின் விவகாரங்களில் நாங்கள் மேற்கொண்ட பங்கு நாட்டின் பொது மக்கள் பங்கு எடுப்பதில் ஒரு பகுதியாகும். மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 10வது தேசிய கமிட்டியின் உறுப்பினராகிய போது நான் 32 கருத்துருக்களை முன்வைத்தேன்.வெளிநாடுகளில் படிப்பை முடித்து விட்டு நாடு திரும்பிய மாணவர்கள் நாட்டுக்கு சேவை புரிவது பற்றிய ஆலோசனை, வெளிநாடுகளில் வாழ்கின்ற சீனரின் பாதுகாப்பு முதலியவை கருத்துருக்களில் அடங்கும். இவையனைத்தும் தொடர்புடைய வாரியங்களால் வரவேற்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
கலை......... ஆமாம். சீனாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிப் போக்கில் புதிய சமூக தட்டுப் பிரிவினர்கள் மேலும் கூடுதலான வரலாற்று கடப்பாட்டை ஏற்றுக் கொள்வதில் ஐயமேயில்லை. 1 2 3
|