• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-06 21:31:27    
பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா சிறப்பு நிகழ்ச்சி அ

cri
நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, சர்வதேச ஊனமுற்றோர் ஒலிம்பிக் கமிட்டியின் பாடலாகும். பெய்ஜிங் நேரப்படி, செப்டம்பர் 6ம் நாளிரவு, பறவை கூடு என்னும் சீனத் தேசிய விளையாட்டு அரங்கில் இப்பாடல் ஒலிபரப்பப்பட்டதுடன், 13வது ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கியுள்ளது.

சுமார் 140 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 4000க்கு கூடுதலான ஊனமுற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீரங்கனைகள், துவக்க விழாவில் கலந்துகொண்டு, சுய வலிமையோடு விடா முயற்சி செய்வதென்ற எழுச்சியை வெளிக்காட்டி, ஒலிம்பிக் விளையாட்டின் மாபெரும் மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர்.

சீன ஊனமுற்றோர் சம்மேளனத்தின் தலைவர் Deng pufang, ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு, தமது வாழ்த்துக்களையும் எதிர்ப்பார்ப்பையும் தெரிவித்தார்.

ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி என்பது, உலகிலுள்ள அனைத்து மக்களின் பொது விழாவாகும். மனித குலம், பாகுபாட்டையும் தப்பு எண்ணத்தையும் நீக்கி, சமத்துவம் மற்றும் இணக்க உலகம் என்ற மதிப்பீடுகளை பரவல் செய்யும் மாபெரும் கூட்டமும் ஆகும். உலக மக்கள் அனைவருடனும் சேர்ந்து, ஓர் உலகம் ஒரே கனவு என்ற முழக்கத்தில், மனித குல சமூகத்தின் அமைதி, முன்னேற்றம், நட்புறவு, மனித நேயம் ஆகியவற்றுக்கு ஆதரவு அளிப்பதை எதிர்ப்பார்க்கின்றோம் என்று அவர் கூறினார்.

சர்வதேச ஊனமுற்றோர் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் க்ராவென் பேசுகையில், பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி போல், மிகவும் சிறந்தாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அவர் கூறியதாவது:

பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி போல், மிகவும் சிறந்தாக அமையும் என்று சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் வாக்குறுதி அளித்துள்ளார். உண்மையிலேயே, சீனா, நாள்தோறும் பல்வேறு செயல்பாடுகளின் மூலம், இரு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளும் தலைச்சிறந்ததாக அமைப்பது உறுதி என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளது என்றார் அவர்.

முதலில், ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா, தலைச்சிறப்பு மிக்கது. துவக்க விழாவில், மனித இயல்பு, கவனிப்பு ஆகியவை வெளிப்படுத்தப்படுவதாக, அதன் தலைமை இசை வடிவமைப்பாளர் பாங் மிங் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் கருத்துக்களில், மனித இயல்பு, கவனிப்பு முதலிய மதிப்பீடுகள் முக்கிய இடங்கள் பெற்றன. இது, இந்த இசைப் படைப்பின் உருவாக்குவதற்கு மேலும் பெரிய வாய்ப்பை வழங்கியது. சீனாவின் பாரம்பரியங்கள், துவக்க விழாவில் எடுத்துக்காட்டப்படும். சீனாவில் புகழ்பெற்ற பொருட்கள் படைப்பில் கருத்தில் கொண்டுள்ளோம் என்றார் அவர்.

1 2 3