இவ்வாண்டின் ஆகஸ்ட் 28ம் நாள், சர்வதேச ஊனமுற்றோர் ஒலிம்பிக் கமிட்டியின் பாடல் இசைக்கப்பட்டதுடன், பெய்ஜிங் சொர்க்க ஆலயத்திற்கு, ஊனமுற்றோர் ஒலிம்பிக் தீயைத் திரட்டி வந்த jing xintian அம்மையார் ஊனமுற்றோர் ஒலிம்பிக் தீபத்தை வெற்றிகரமாக ஏற்றினார். அவர், சீன ஊனமுற்றோர் கலைக் குழுவின் செவிகேளாத வாய் பேச இயலாத நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார்.

தீயை ஏற்றும் விழாவில், சீன தலைமையமைச்சர் வென்சியாபாவ்.
பெய்ஜிங் 2008ம் ஆண்டு ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்டம் இப்போது துவங்குகிறது. என்று கூறி ஊனமுற்றோர் ஒலிம்பிக் தீபத்தொடரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஆகஸ்ட் 28ம் நாள் முதல், சப்டம்பர் 6ம் நாள் வரை, நவீன சீனா, பண்டைய சீனா ஆகிய இரு நெறிகளில் இத்தீபத் தொடரோட்டம் நடைபெற்றது. சீனாவின் 11 நகரங்களில் நடைபெற்ற இத்தீபத்தொடரோட்டம், அனைத்தையும் தாண்டி செல்லுதல், ஒன்றிணைப்பு, பகிர்வு ஆகிய மூன்று மதப்பீடுகளை உயிர்த்துடிப்புடன் விளக்கி பரவலாக்கியது. 1 2 3
|