• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-06 21:31:27    
பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா சிறப்பு நிகழ்ச்சி அ

cri

பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா, இன்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. இது, சுமார் இரண்டு மணி 50 நிமிடம் நீடிக்கும். முதலில், பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களின் விளையாட்டு வீரர்கள் அரங்கில் நுழைந்தனர். பிறகு, கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.

உலகில் 60 கோடி ஊனமுற்றோர் வாழ்கின்றனர். சீனாவில் 8 கோடியே 30 இலட்சத்திற்கு மேலான ஊனமுற்றோர் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டியைப் பார்த்து மகிழ வசதியளிக்கும் வகையில், பெய்ஜிங் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டியில், சைகை மொழி அறிவிப்பு முறைமை, முதல்முறையாகப் பயன்படுத்தப்படுகிறது. ஊனமுற்றோர், அப்போட்டியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், முப்பரிமான கார்ட்டூனால் உருவாக்கப்பட்ட சைகை மொழி மூலம், விரைவாக தகவல்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும். இத்தகைய சேவையைப் பயன்படுத்துவது, ஒலிம்பிக் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

1960ம் ஆண்டு முதல் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற முதல், இப்போட்டிக்கு, 48 ஆண்டுகால வரலாறு உண்டு. அதன் தொடக்கம், வரலாற்று பின்னணியோடு அமைந்த விடயமாகும். இது பற்றி, பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் ஊனமுற்றோர் ஒலிம்பிக் பிரிவின் துணைத் தலைவர் wang bingyang கூறியதாவது,

இரண்டாவது உலகப் போரில், பல்லாயிரகணக்கானோர் உறவினர்களை இழந்த அதே வேளையில், பலர் ஊனமுற்றோராக மாறினர். 1948ம் ஆண்டு, Ludwig Guttmannஉம், ஊனமுற்றோர் இலட்சியத்தில் ஆர்வம் கொண்டிருந்தவர்களும், பல ஊனமுற்ற படை வீரர்களை, சக்கர வண்டியில்ல் உட்கார்ந்த வண்ணம், கூடைப்பந்து போட்டியை நடத்த ஏற்பாடு செய்தனர். அப்போட்டி, Stoke Mandeville விளையாட்டுப் போட்டியாக அழைக்கப்பட்டது. 1960ம் ஆண்டு, ரோம் நகரில் நடைபெற்ற 17வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி முடிந்த 2 வாரங்களுக்குப் பின், உலகின் 23 நாடுகளிலிருந்து வந்த 400 ஊனமுற்ற விளையாட்டு வீரர்கள், அங்கு நடைபெற்ற 9வது Stoke Mandeville விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டனர். அப்போட்டி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டினால், முதலாவது ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

1960ம் ஆண்டு முதல் தான், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. 1988ம் ஆண்டு சியோலில் நடைபெற்ற 8வது ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின்னர் தான் இப்போட்டி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடத்தப்படும் அதே நகரில் நடத்தப்படும் வழக்கம் ஏற்பட்டது. 1989ம் ஆண்டு சர்வதேச ஊனமுற்றோர் ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.

1 2 3