 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட வீரர்களின் ஓய்விடமாகவும் வசிப்பிடமாகவும் திகழ்கின்ற ஒலிம்பிக் கிராமம், பல்வகை சேவைத் திறன்களைக் கொண்டிருக்கிறது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, பல்வேறு நாடுகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள், ஒலிம்பிக் கமிட்டியின் அதிகாரிகள் ஆகியோர் இங்கே தங்கியிருக்கின்றனர். சுமார் 5400 தன்னார்வத் தொண்டர்கள் இக்கிராமத்தில் உள்ளனர். விளையாட்டுப் போட்டியின் போது இங்கே தங்கியிருக்கும் "கிராமவாசி"களுக்கு பயண உதவி, பாதுகாப்புச் சோதனை, வசிப்பிடச் சேவை, செய்தி ஊடக சேவை, மருத்துவச் சிகிச்சை உதவி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அவர்கள் வழங்குகின்றனர். அவர்களில் சிலர் உள்ளடங்கிய தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான உதவியணி இதில் குறிப்பிடத்தக்கது. இந்த அணி சுருக்கமாக NOC உதவியணி என அழைக்கப்படுகிறது.
சுமார் 1000 பேர் இடம்பெறும் இவ்வணி, ஒலிம்பிக் கிராமத்தில் மிகப் பெருமளவிலான தன்னார்வத் தொண்டர் அணியாகும். பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பிரதிநிதிக் குழுகளுடன் சேர்ந்து முழு போக்கிலும் பயணம் செய்யும் முக்கிய பொறுப்பை இவர்கள் ஏற்கின்றனர். பிரதிநிதிக் குழுவினர்கள் சந்திக்கக் கூடிய பிரச்சினைகளையும் சமாளிப்பதற்கு அவர்கள் துணை புரிய வேண்டும்.
1 2 3
|