
வேறுபட்ட மொழிகளில் சரளமாக பேசுவது, NOC உதவியணியினராக மாறுவதற்கு இன்றியமையாத நிபந்தனையாகும். இவ்வணியைச் சேர்ந்த ஸ்பேனிஷ் மொழி உதவியாளர் WU HE JIA, பெய்ஜிங் 2வது அந்நிய மொழி கல்லூரியின் ஸ்பேனிஸ் மொழித் துறையைச் சேர்ந்தவர். NOC உதவியணியின் விபரமான பணிகளை அவர் செய்தியாளரிடம் கூறினார்.

"பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒலிம்பிக் குழுவின் தலைமைக் குழுவுக்கும், அக்குழுவுடன் சேர்ந்து வந்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் நாங்கள் சேவை புரிகின்றோம். பெரும்பாலும் குழுத் தலைவர்களுடன் தொடர்பு கொள்கின்றோம். அவர்களின் ஏற்பாடுகளை ஏற்றுக் கொண்டு, வீரர்களின் அன்றாட வாழ்க்கை தேவைகளுக்குத் துணை புரிகின்றோம்" என்றார் அவர்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலும் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டியிலும் கலந்து கொள்ளும் பல்வேறு பிரதிநிதிக் குழுக்களுக்கும் NOC உதவியணி சேவை புரிகிறது. ஸ்பெயின் போன்ற பிரதிநிதிக் குழுவினர் அதிகமாக உள்ள நாடுகளுக்கு சுமார் 10 உதவியாளர்களும், விளையாட்டு வீரர்களை குறைவாக அனுப்பிய நாடுகளுக்கு 3 அல்லது 4 உதவியாளர்களும் சேவை புரிகின்றனர்.
1 2 3
|