
இளம் தன்னார்வத் தொண்டர்களைத் தவிர, நரைமுடி கொண்ட மூத்தவர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கின்றனர். ஒலிம்பிக் அமைப்புக் குழுவினால் நியமிக்கப்பட்ட அவர்கள், பல்வேறு பிரதிநிதிக் குழுத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு, மொழிப் பெயர்க்கும் பணிக்கு நேரடியாக பொறுப்பேற்கின்றனர். இவர்கள் சீன வெளியுறவு அமைச்சகம், சீன வானொலி நிலையம், சீனச் சுங்கத் துறையின் தலைமை அலுவலகம், பெய்ஜிங் அந்நிய மொழி பல்கலைக்கழகம் முதலிய பெரிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். சீன வானொலி நிலையத்தின் வியட்நாம் மொழிப் பிரிவிலிருந்து ஓய்வு பெற்ற ZHANG YU அம்மையார் அவர்களில் ஒருவர். பெருமையுடனான இந்த புனிதப் பணி பற்றி குறிப்பிடுகையில் ZHANG YU அம்மையார் உணர்ச்சிவசப்பட்டார். அவர் கூறியதாவது—
"வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் இத்தகைய மாபெரும் சர்வதேச விழாவில் கலந்து கொள்வதில் பெருமை அடைகின்றேன். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக தொடர்புப் பணியாளராக சேவை புரிந்ததில், பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் உணர்கின்றேன்" என்றார் அவர். 1 2 3
|