• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-11 15:15:54    
நிலா விழா கொண்டாடும் வழிமுறை

cri
கலை...... கடந்த வார நிகழ்ச்சியில் சிறுநாயக்கன்பட்டி கே. வேலுச்சாமி சீனாவின் விழாக்கள் பற்றி கேட்ட வினாகளுக்கு விடையளித்தோம். அதில் நிலா விழா பற்றிய கதை தகவல் விபரமாக விளக்க வில்லை.

தமிழன்பன்.......ஆகவே இந்த நிகழ்ச்சியில் முதலில் நிலா விழா பற்றிய சுவையான கதையை கூற போகிறோம். அப்படித்தானே.

கலை....... ஆமாம். முன்பு நிலா விழாவுக்கு சட்ட வடிவத்தில் குறிப்பாக விடுமுறை நாட்கள் ஒதுக்கப்பட வில்லை.

தமிழன்பன்.........நான் பெய்ஜிங் வந்த பின் ஆகஸ்ட் மாதம் முதலாவது முறையாக நிலா விழா கொண்டாட சீன மக்கள் காட்டிய உற்சாகத்தை மிகவும் உணர்ந்தோம்.

கலை.......இது பற்றி விபரமாக விளக்கி கூறலாமா.

தமிழன்பன்........மிக்க மகிழ்ச்சி. பண்டிகைக்கு முந்திய 15 நாட்கள் நிலா கேக்கள் எல்லா சிற்றுண்டி கடைகளிலும் விற்கப்பட்டன. நமது வானொலி நிலையத்தில் நிலா கேக் மற்றும் திராட்சை மது அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டன.

கலை........ஆமாம். நீங்கள் நன்றாக நினைவு வைத்திருக்கிறீர்கள். நிலா விழா ஆண்டுக்கு ஒரு முறை வருகின்றது. அப்போது எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் சீன மக்கள் தொலை பேசி மூலம் உடன் பிறந்தவர்களுடன் தொடர்பு கொண்டு விழா வாழ்த்துக்கள் தெரிவிப்பது உறுதி.

தமிழன்பன்..........அது மட்டுமல்ல சிறப்பு சேவையான விரைவாந தபால் தொடர்பு மூலம் கேக் அனுப்புவது இப்போது சீனாவில் சாதாரண விடயமாகும்.

கலை......ஆமாம். தபால் நிலையம் கேக் வாங்கி நேரடியாக உடன்பிறந்தவர்களுக்கு அனுப்புவதற்கான சேவையை மக்களுக்காக கடந்த ஆண்டு முதல் நடத்த தொடங்கியது.

1 2 3