• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-11 15:15:54    
நிலா விழா கொண்டாடும் வழிமுறை

cri

தமிழன்பன்........இவ்விழா மனித நேய இணக்கம் மிகவும் நிறைந்ததாகும்.

கலை......ஆகவே மக்களிடையிலான ஆழமான நிலா விழா கொண்டாடும் உணர்வுகளுக்கு நடுவன் அரசு மதிப்பளித்து விழாவை சட்டரீதியில் கொண்டாடும் வகையில் விடுமுறையாக 3 நாட்களை உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழன்பன்.......இது இவ்வாண்டு தான் முதலில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சீன மக்கள் நிலா விழாவை மூன்று நாட்களாக கொண்டாடலாம். அப்படிதானே.

கலை.......ஆமாம்.

கலை..........அடுத்து நிலா விழா கொண்டாடும் போது கேக் உட்கொள்வது மட்டுமல்ல மஞ்சள் மது குடிப்பது சீன மக்களின் பழக்கவழக்கமாகும்.

தமிழன்பன்.......குறிப்பாக தென் சீனாவிலுள்ள ஷாங்காய், ச்செசியாங், சியான்சு, குவாஞ்சோ முதலிய இடங்களில் வாழ்கின்ற மக்களுக்கு மஞ்சள் மது குடிப்பது மிகவும் பிடிக்கும் பழக்கமாகும் என்று அறிந்தேன். அப்படியா?

கலை......நீங்கள் குறிப்பிட்டது உண்மைதான். மஞ்சள் மது தானியங்களால் தயாரிக்கப்படுகிறது. உடல் ஆரோக்கியதிற்கு மிகவும் நன்மை தருகின்றது. ஆண்டு முழுவதும் எந்த நேரத்திலும் குடிக்கலாம். சாதாரண மது போன்ற எழுச்சி கிடைக்காது. ஆனால் மிதமான எழுச்சியை தான் இது கொடுக்கும்.

தமிழன்பன்............அது சரி. இரவு நிலாவை கண்டு நிலா கேக் உட்கொள்ளும் போது மஞ்சள் மது குடிக்க வேண்டியதன் காரணம் என்ன?

கலை.......நீங்கள் எழுப்பிய வினா மிக சரியான வினாவாகும். முற்காலத்தில் சீன மக்கள் குறிப்பாக தென் சீனாவில் வாழ்கின்ற மக்கள் மஞ்சள் மது குடித்தார்கள். வசந்த நாட்காட்டியின் படி துவெ வூ மற்றும் நிலா விழா நாட்களில் மஞ்சள் மது குடித்தால் உடம்புக்கு நல்லது. அவ்வளவு தான் குடிப்பதற்காக குறிப்பான காரணங்கள் எதுவும் இல்லை. ஆனால் அப்போதிலிருந்தே வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும் மஞ்சள் மது குடித்தால் உடம்புக்கு நன்மை கிடைக்குமென்ற நம்பிக்கை சீன மக்களிடையில் பரவியுள்ளது.

1 2 3