• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-12 17:01:19    
இஸ்ரேல் ஊனமுற்றோர் விளையாட்டுச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் leah Schneider அம்மையாரின் கருத்து

cri

பெய்ஜிங் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகளை இஸ்ரேல் ஊனமுற்றோர் விளையாட்டுச் சங்கம் சிறப்பாக மேற்கொண்டது என்று leah Schneider கூறினார்.

விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சித் திடல்கள், மருந்துகள், சாதனங்கள், நிதி முதலியவற்றை அது இயன்ற அளவில் வழங்கியது. இதைத் தவிர, அவர்கள், உள்ளூர் போட்டி, ஐரோப்பிய சாம்பியன்பட்டப் போட்டி, உலகச் சாம்பியன்பட்டப் போட்டி, சர்வதேச அளவியான பல்வேறு போட்டிகள் ஆகியவற்றில் கலந்து கொள்வதை அது ஆதரித்தது. இருப்பினும், ஊனமுற்றோர் விளையாட்டு வீரர்களின் ஆயத்தப்பணி, பல்வேறு இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. அவர் கூறியதாவது

ஊனமுற்றோர் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான விளையாட்டுக் கருவிகள், விளையாட்டுத் திடல், பிற சாதனங்கள் ஆகிய வசதிகள் தேவை. அவற்றின் செலவு, அதிகமாகும். அவர்களுக்கு குடும்பத்தினர், குழந்தைகள் ஆகியோர் உள்ளனர். அவர்களும் வேலை செய்ய வேண்டும். தவிர, அவர்கள் பயிற்சி செய்து, வெளிநாடுகளுக்குச் சென்று போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் போதிய நேரம், பணம், போட்டியில் கலந்து கொள்ளும் உற்சாகம் முதலியவை அவசியம்.

ஆயினும், இஸ்ரேலின் ஊனமுற்றோர் விளையாட்டு வீரர்கள், முயற்சிகளை கைவிடவில்லை. 4 ஆண்டுகளுக்கு முன், Athens ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், இஸ்ரேல் பிரதிநிதிக் குழு, 4 தங்கப் பதக்கங்களையும் 4 வெள்ளிப் பதக்கங்களையும் 5 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளது. ஆனால், பல்வேறு தேர்வுகளுக்கு பின், 42 விளையாட்டு வீரர்கள், நடப்புப்போட்டியின் 11 வகை விளையாட்டுக்களில் கலந்து கொள்வதை இஸ்ரேல் ஊனமுற்றோர் விளையாட்டுச் சங்கம், இறுதியில் உறுதிப்படுத்தியது. துப்பாக்கிச்சுடுதல், நீச்சல், படகோட்டம், பாய்மர படகோட்ட போட்டி

முதலிய பல வகை விளையாட்டுக்களில் இஸ்ரேல் பிரதிநிதிக் குழு, பதக்கங்களை பெறும் ஆற்றல் கொண்டிருக்கிறது என்று leah Schneider கூறினார்.

1 2 3