• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-12 17:01:19    
இஸ்ரேல் ஊனமுற்றோர் விளையாட்டுச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் leah Schneider அம்மையாரின் கருத்து

cri

இஸ்ரேலின் ஊனமுற்றோர் விளையாட்டு வீரர்கள், இன்னல்களை எதிர்கொண்டு, விளையாட்டில் ஊன்றி நிற்கும் எழுச்சியை, இஸ்ரேல் அரசுத் தலைவர் Shimon Peres பாராட்டினார். ஆகஸ்ட் திங்களில், ஊனமுற்றோர் விளையாட்டு வீரர்கள், மதிப்பு மிக்கவர். அவர்கள், உண்மையான வீரர்கள் ஆவர். அவர்கள், பதக்கங்களை பெறுவார்கள் என்று Shimon Peres நம்புகின்றார். இஸ்ரேலின் ஊனமுற்றோர் விளையாட்டு வீரர்களுடன் தொடர்பு கொள்ளும் போக்கில், ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டி பற்றிய உள்ளார்ந்த பொருள் குறித்து leah Schneider அம்மையார் ஆழமாக உணர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது

வியப்பு பார்வையுடன், அனைவரும் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை கையாள வேண்டும். உறுதியோடு செயல்பட்டால் தான், குறிக்கோள் எட்டப்படும். ஊனமுற்றோர் செய்ய கூடிய செயல்களை மற்றவர் அனைவரும், செய்ய முடியும். எனவே, அவர்களின் மன உறுதியை கண்டு, நாமும் உறுதியாக இருக்க வேண்டும் என்று leah Schneider அம்மையார் கூறினார். அவர் பெய்ஜிங்கிற்கு இந்த போட்டியை கண்டுகளிக்க வரவில்லை. இஸ்ரேல் விளையாட்டு வீரர்களுக்கு கைதட்டி ஊக்கம் அளிக்கும் வகையில், ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் திடல்கள் மற்றும் அரங்குகளுக்கு நேரில் செல்ல வேண்டும் என்று அவர் விரும்புகின்றார். ஆனால், பணிக் காரணங்களால், அவர் இஸ்ரேலில் தங்க வேண்டியுள்ளது. இது வருத்தமானது. பெய்ஜிங்குக்குச் சென்ற தமது ஊழியர்கள், போட்டிக்க ஆயத்தப்பணிகள் பற்றி பேசிய போது, அவர் மகிழ்ச்சியடைந்தார். அவர் கூறியதாவது

சங்கத்தின் தலைவர் Danny Ben Abu, பொதுச் செயலாளர் Radu Rosenthal ஆகியோர், வியப்படைந்தனர். ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் பணிகளை அவர்கள் பாராட்டினர். அனைத்து விடயங்களும் ஒழுங்காக இருக்கின்றன. பெய்சிங் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை போல் சிறப்பானதாகும் என்று அவர்கள் நம்புகின்றனர் என்றார் leah Schneider அம்மையார்.


1 2 3