• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-16 18:05:00    
சான் சி மாநில கிராமப்புறத்தில் செயல்படுத்தப்படுகின்ற புதிய ரக கூட்டுறவு மருத்துவ அமைப்புமுறை

cri
கடந்த சில ஆண்டுகளாக, கிராமப்புறங்களில் புதிய ரக கூட்டுறவு மருத்துவ அமைப்புமுறையை சீன அரசு பெரும் முயற்சியுடன் பரவலாக்கியுள்ளது. இம்முயற்சிகளின் மூலம், நாட்டின் நடுப் பகுதியில் அமைந்துள்ள சான் சி மாநிலத்தின் xin zhou நகரில், சுமார் 80 விழுக்காட்டுக்கு மேற்பட்ட விவசாயிகள் இந்த அமைப்புமுறையிலிருந்து நன்மை பெற்றுள்ளனர்.

கிராமப்புறத்தில் புதிய ரக கூட்டுறவு மருத்துவ அமைப்புமுறை என்பது, அரசின் ஏற்பாட்டில், விவசாயிகள் சுய விருப்பத்தின் படி சேர்ந்து கொள்ளும் ஒரு பரஸ்பர மருத்துவ உதவி அமைப்புமுறையாகும். தனியார் கட்டணம் செலுத்துவது, அரசு உதவி தொகை வழங்குவது ஆகிய வடிவங்களின் மூலம் நிதி தொகை திரட்டப்படுகின்றது. இதில் சேரும் விவசாயிகள் நோய்வாய்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதிக மருத்துவ கட்டணம் செலுத்த வேண்டிய போது, அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

Xin zhou நகரைச் சேர்ந்த xin fu பிரதேசத்தில் விவசாயிகள் அதிகமாக உள்ளனர். 2007ம் ஆண்டு பிப்ரவரி திங்கள், இப்பிரதேசத்தில் புதிய ரக கிராமப்புற கூட்டுறவு மருத்துவ அமைப்புமுறை நடைமுறைப்படுத்தப்படத் துவங்கியது. விவசாயிகள் ஆண்டுக்கு 15 யுவானை செலுத்தி, இந்த அமைப்புமுறையின் ஒரு உறுப்பினராக மாறலாம். விவசாயிகள் இந்த புதிய அமைப்புமுறையை வெகுவாக பாராட்டுகின்றனர்.

இவ்வாண்டு 67 வயதான huang chao xiu அம்மையார், xinfu பிரதேசத்தில் gao jia zhuang என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயியாவார். கடந்த ஆண்டு ஏப்ரல் திங்கள், அவர் மிதி வண்டி மூலம், வயலுக்குச் சென்ற போது, நீர் இறைக்கின்ற கால்வாயில் விழுந்து, கடுமையாக காயமுற்றார். மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் 11 மணி நேரம் அறுவை சிகிச்சை அளித்தனர். உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனால், அவர் விழிப்பு அடைந்தவுடன் கவலைப்பட்டார். அப்போதைய நிலைமையை அவர் மீளாய்வு செய்து கூறியதாவது

விழிப்பு பெற்ற போது, என்னைக் காப்பாற்ற வேண்டாம் என்று பிள்ளைகளிடம் கெஞ்சினேன். மருத்துவ சிகி்ச்சை கட்டணம் அதிகமாகும். குறைந்தது 20 முதல் 30 ஆயிரம் யுவான் வரை தேவைப்படும். விவசாய குடும்பத்தில் அவ்வளவு பணம் இல்லை என்றார் அவர்.

Huang chao xiu குடும்பம் செல்வ செழிப்பு பெற்றதல்ல. வீட்டில் 98 வயதான மாமியாரை பராமதித்து கவனிக்க வளர்க்க வேண்டும். ஆகையால், தனது சிகிச்சை கட்டணம் பற்றி அவர் மிகவும் கவலைப்பட்டார். அவரை ஆறுதலைடைய செய்யும் பொருட்டு, மருத்துவர்கள் அவரது நிலைமையை உணர்வுப்பூர்வமாக கேட்டனர். அவர் புதிய ரக கூட்டுறவு மருத்துவ அமைப்புமுறையில் சேர்ந்துள்ளார் என்பதை அறிந்த பின், கவலையே வேண்டாம் என்று மருத்துவர்கள் அவரிடம் கூறினர்.

1 2 3