• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-16 18:05:00    
சான் சி மாநில கிராமப்புறத்தில் செயல்படுத்தப்படுகின்ற புதிய ரக கூட்டுறவு மருத்துவ அமைப்புமுறை

cri

மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய பின், xin fu பிரதேசத்தின் புதிய கிராமப்புற கூட்டுறவு மருத்துவ அலுவலகம் huang chao xiuவின் வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டது. அது பற்றி, அவர் கூறியதாவது

எனது மூத்த மகன் அங்கிருந்து 12 ஆயிரம் யுவான் திரும்பி பெற்றார். மருத்துவ சிகிச்சை பெற நான் 24 ஆயிரம் யுவான் செலவிட்டிருந்தேன். அரசு எனக்கு பாதி அளவை திரும்ப வழங்கியது. மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். குழந்தைகளின் பல்கலைக்கழகக் கட்டணம் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றார் அவர்.

அப்போதைய நிலைமை பற்றி அவர் மீளாய்வு செய்ததாவது

கட்சியின் கொள்கை சிறப்பானது என்று ஆழமாக உணர்ந்துள்ளேன். கிராமப்புறத்தில் இந்த அமைப்புமுறையில் சேர்ந்து கொண்ட விவசாயிகளுக்கு இது உண்மையாகவே நன்மை பயக்கும் என்றார் அவர்.

இந்நகரில் huang chao xiuவைப் போன்று இத்தகைய அனுப்பவங்களைக் கொண்ட விவசாயிகள் அதிகம். Xin zhou நகரில் புதிய கிராமப்புற கூட்டுறவு மருத்துவ அமைப்புமுறை 2003ம் ஆண்டு முதல் பரிசோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட துவங்கியது. இதுவரை, 10 மாவட்டங்களைச் சேர்ந்த 16 இலட்சத்து 10 ஆயிரம் விவசாயிகள் இந்த அமைப்புமுறையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று இந்நகரின் சுகாதார பணியகத்தின் துணைத் தலைவர் gao fang hua கூறினார். அவர் கூறியதாவது

பல்வேறு நிலை அரசுகள், நாட்டின் கோரிக்கை படி போதுமான கட்டணத்தை ஒதுக்கியுள்ளன. இத்துறையில் அரசு மிகவும் கவனம் செலுத்துகின்றது. எமது நகரில் ஏழை மக்கள் அதிகம். இருந்தாலும், இது போன்ற கூட்டுறவு மருத்துவ அமைப்புமுறைக்கு முதலில் நிதி உத்தரவாதம் செய்ய வேண்டும் என்றார் அவர்.

இந்த அமைப்புமுறை கிராமப்புறங்களில் பரவலாகிய பின், கண்காணிப்பும் நிர்வாகமும் சுகாதார பணியகத்தின் முக்கிய கடமையாகிவிட்டன. Gao fang hua கூறியதாவது

14 மாவட்டங்களுக்கும் 185 ஊர்களுக்கும் சென்று, விவசாய குடும்பங்களைச் சந்திக்கின்றோம். பொது மக்களி்ன் கருத்துக்களைக் கேட்க முயல்கின்றோம். எமது அயராது முயற்சி, தலைச்சிறந்த நிர்வாகம் மற்றும் தொழில் நுட்பம் மூலம் மக்களுக்கு சேவை புரிய விரும்புகின்றோம். மக்கள் மன நிறைவு பெற செய்யவும், அவர்கள் உண்மையான நன்மை பெற செய்யவும் பாடுபடுகின்றோம் என்றார் அவர்.

அண்மையில், சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் ஆன் குய் மாநிலத்தில் சோதனை பயணம் மேற்கொண்டார். விவசாயிகளுக்கான ஒட்டுமொத்த மருத்துவ உதவி தொகையை உயர்த்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது

மருத்துவ காப்பீட்டில் அரசின் பங்கு தற்போதைய 40 யுவானிலிருந்து 2 ஆண்டுகளில் 80 யுவானுக்கு அதிகரிக்க வேண்டும் என்று நடுவண் அரசு தீர்மானித்துள்ளது. அதன் விளைவாக, கூட்டுறவு மருத்துவத்தின் வரையறை உயர்த்தப்படும். அரசு நடவடிக்கைகள் மூலம், விவசாயிகளின் மருத்துவ சிகிச்சை பிரச்சினையைத் தீர்க்கும் என்றார் அவர்.

1 2 3