• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-22 10:17:58    
மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 4வது முறையாகக் கலந்துகொண்ட தென் கொரிய வீரர்

cri

பெய்ஜிங் மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட தென் கொரிய பிரதிநிதிக் குழுவின் பளுதூக்கல் வீரர் park jong chel, நான்காவது முறையாக மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுக்கிறார்.

1983ம் ஆண்டு, park jong chel பளுதூக்கல் போட்டியில் ஈடுபடத் துவங்கினார். பளுத்தூக்கல் பற்றி அவர் கூறியதாவது:

அப்பொழுது, நான் வலிமையுடையவனாக இருந்தேன். பளுதூக்கல் பயிற்சி செய்ய என் நண்பர்களும் உறவினர்களும் எனக்கு ஆலோசனை தந்தனர். பளுதூக்கல் பயிற்சி செய்தால், நான் சாதனைகளைப் பெறலாம் என்று நான் நினைத்தேன். எனவே, நான் பளுதூக்கல் பயிற்சியை மேற்கொள்ளத் துவங்கினேன் என்று அவர் கூறினார்.

பளுதூக்கல் பயிற்சி செய்வது மற்றும் மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வது, அவரின் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டு வருகின்றன.

பளுத்தூக்கல் பயிற்சி செய்யத் துவங்கிய பின், நான் ஊக்கத்துடன் வாழ்கின்றேன். தற்போது, நான் பளுத்தூக்கலில் கைதேர்ந்தவரவராக கருதப்படுகின்றேன். தவிர, நாட்டின் சார்பில் மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வது எனக்கு மிகவும் பெருமையான விடயமாகும். பளுத்துக்கல், என் வாழ்க்கையில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதில் ஐயமில்லை. இந்த சிறந்த மாற்றங்கள், வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை என்று அவர் கூறினார்.

1 2 3