• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-22 10:17:58    
மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 4வது முறையாகக் கலந்துகொண்ட தென் கொரிய வீரர்

cri

அது மட்டுமல்ல, பளுத்தூக்கல் மூலம் பல நண்பர்களை அவர் அறிந்துகொள்கின்றார். அவருக்கு பல நண்பர்கள் உள்ளனர். குறிப்பாக, பல சீன நண்பர்கள் இதில் அடங்குகின்றனர். இது குறித்து, அவர் கூறியதாவது:

தற்போது, பல சீன பளுத்தூக்கல் வீரர்கள், எனது நல்ல நண்பர்களாக மாறியுள்ளனர். ஒவ்வொரு முறையும், நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த போது, அன்பளிப்புப் பொருட்களை பரிமாறிக்கொள்கின்றோம். எடுத்துக்காட்டாக, 1994ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆசிய பளுத்தூக்கல் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில், சீன பளுத்தூக்கல் வீரர் zhanghaidong ஐ சந்தித்து பழகி நன்றாக அறிந்துகொண்டேன். நான் அவரை விட இரண்டு வயது மூத்தவர். அவர் எனது தம்பி போன்றவர் என்றார் அவர்.

1994ம் ஆண்டு முதல் முறையாக, park jong chel பெய்ஜிங்குக்கு வந்தார். 14 ஆண்டுகளுக்குப் பின், பெய்ஜிங் மாநகரில் தற்போது மீண்டும் பயணம் மேற்கொண்டார். பெய்ஜிங்கிலான தலைகீழான மாற்றங்களைப் பார்த்த போது, அன்பான உணர்வு அவரது மனதில் ஏற்பட்டது.

14 ஆண்டுகளுக்குப் பின், நான் பெய்ஜிங் மாநகருக்கு மீண்டும் வந்துள்ளேன். பெய்ஜிங் நகரவாசிகள் மேலும் ஊக்கத்துடன் வாழ்கின்றனர். அவர்களது ஆக்கப்பூர்வமான மனப்பான்மை, எனது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. தற்போது, நான் ஓய்வாக நேரத்தைக் கழிக்கின்றேன். மொத்தத்தில், மாபெரும் மாற்றங்கள் பெய்ஜிங் மாநகரில் ஏற்பட்டுள்ளன என்றார் அவர்.

1996ம் ஆண்டு, மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக கலந்துகொண்ட park jong chel, ஆடவர் 90 கிலோ எடைக்கு குறைவானோர் பளுத்தூக்கல் போட்டியின் வெள்ளிப் பதங்களைப் பெற்றார். அடுத்த இரண்டு மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், அவர் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றார். பெய்ஜிங் மாற்று திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மூன்றாவது முறையாக வெள்ளி பதக்கம் பெறுவது, அவரது குறிக்கோளாகும்.

1 2 3