குவான்சி yunlin இரு கரை வேளாண் துறை வேளாண் ஒத்துழைப்பு ஆய்வு மண்டலம் 2006ம் ஆண்டு ஏப்ரல் திங்களில் நிறுவப்பட்டது. தைவானின் முதலீடுகளை ஈர்த்து, வரையறைமயமாக்க உற்பத்தி மாதிரி தளத்தை உருவாக்குவது என்பது இம்மண்டலத்தின் முக்கிய நோக்கமாகும். பெருநிலப்பகுதி மற்றும் தைவானைச் சேர்ந்த வேளாண் துறையின் ஒத்துழைப்புக்கு இது மேடையை அளிக்கிறது.
இது வரை, சுமார் 40 தைவான் தொழில் நிறுவனங்கள் அல்லது அமைப்புகள், இந்நகரில் வணிகப் பேச்சுவார்த்தையை நடத்தி சோதனைப் பணிகளை செய்துள்ளன. இம்மண்டலத்திலான 38 தைவான் தொழில் நிறுவனங்களின் மொத்த முதலீட்டுத் தொகை, 240 கோடி யுவானை எட்டியுள்ளது. தைவான் நீரிணையின் இரு கரை வேளாண் ஒத்துழைப்பு மண்டலத்தின் மூலம், தைவானின் புதிய வகைகளும் தொழில் நுட்பங்களும் இந்நகரில் பல சாதனைகளைப் பெற்றுள்ளன. தவிர, இம்மண்டலம் வெற்றிகரமாக உட்புகுத்திய தைவானின் 40 வகை பழங்கள், குவாங்சி தன்னாட்சிப் பிரதேசத்தின் nanning, yulin போன்ற நகரங்களில் நன்கு விற்பனையாகின்றன.
1 2 3
|