இம்மண்டலத்தின் விறுவிறுப்பான வளர்ச்சி, உள்ளூர் பிரதேசத்தின் விவசாயிகளுக்கு அதிக நலன்களை தரும். தொடர்புடைய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி பரவல் செய்ததன் மூலம், உற்பத்தி விளைச்சலும் விவசாயிகளின் வருமானமும் அதிகரித்துள்ளன. தவிரவும், விற்பனை செய்வது சிரமம் என்ற பிரச்சினையும் தீர்க்கப்பட்டது என்று Yulin நகரின் வேளாண் தொழில் நுட்பப் பணியாளர் gubiao தெரிவித்தார். அவர் கூறியதாவது:

இந்த ஒத்துழைப்பு மண்டலம் நிறுவப்பட்ட பின், இரு கரை பணியாளர்கள் மற்றும் தொழில் நுட்பத்தின் பரிமாற்றங்கள் மேலும் வசதியாக மாறியுள்ளன. சீனப் பெருநிலப்பகுதியைப் பொறுத்தவரை, தைவானின் தொழில் நுட்ப வல்லுனர்களையும், இனங்களின் மூலவளங்களையும் இம்மண்டலம் உட்புகுத்தியுள்ளது. இது ஒரு அருமையான செல்வமாகும் என்று அவர் கூறினார்.
உலகளவிலான போட்டிக்கான நிர்ப்பந்தத்தின் முன்னிலையில், மேலதிக தைவான் வேளாண் தொழில் நிறுவனங்கள் பெருநிலப்பகுதிக்கு வந்து, புதிய வளர்ச்சி வாய்ப்பை தேடுகின்றன. இரு கரை வேளாண் துறையின் ஒத்துழைப்பு ஆய்வு மண்டலம், தைவான் தொழில் நிறுவனங்கள் பெருநிலப்பகுதியில் முதலீடு செய்வதற்கு ஏற்ற மேடையை வழங்குகிறது. இரு கரை வேளாண் துறையில் பரஸ்பரம் நலன் தந்து, வெற்றி பெறுவது சாத்தியமே என்று இரு கரை வேளாண் துறையின் ஒத்துழைப்பு பற்றிய ஆய்வாளர் zhaoyuelong தெரிவித்தார். 1 2 3
|