 கடந்த சில ஆண்டுகளாக, சீன பொருளாதார கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், தயாரிப்பு மற்றும் சேவை தொழில் விரைவாக வளர்ந்து வருகின்றது. தொழில் நிறுவனங்களில் அதிக உயர் தொழில் நுட்ப திறமைசாலிகள் தேவைப்படுகின்றனர். ஆனால், சீனாவில் தொழிற்கல்வி வளர்ச்சி இன்னும் பின்தங்கிய நிலையில் உள்ளது. சமூகத்தின் தேவையை நிறைவேற்ற முடியவில்லை. எடுத்துக்காட்டாக, சீனாவில் உயர் நிலை தொழில் நுட்பத் தொழிலாளர்கள் மற்றும் தொழில் நுட்பப் பணியாளர்களின் எண்ணிக்கை மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 3.5 விழுக்காடு மட்டுமே வகிக்கின்றது.இதற்கும் வளர்ந்த நாடுகளிலுள்ள 20 விழுக்காடு முதல் 40 விழுக்காடு வரையான நிலைக்கும் இடையில் பெரும் இடைவெளி நிலவுகின்றது. இது, உயர் நிலை தொழிற் பள்ளியின் மாணவர்களுக்கு சிறந்த வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

தொழிற்கல்வி வளர்ச்சியில் சான் சோ நகர அரசு மிகவும் கவனம் செலுத்துகின்றது என்று சான் சோ நகர கல்வி ஆணையத்தின் துணைத் தலைவர் hang yong bao கூறினார். தற்போது, சான் சோ நகரில் 36 தொழிற் பள்ளிகள் உள்ளன. அவற்றில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை சாதாரண உயர் நிலை பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை தாண்டியுள்ளது. பட்டதாரிகள் வேலை வாய்ப்புகளை பெறும் நிலைமை சிறப்பாக உள்ளது என்று அவர் எடுத்து கூறினார். அவர் கூறியதாவது
1 2 3
|