மேற்கு சீனாவின் சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் உருமுச்சி நகரில், Jin Feng அறிவியல் தொழில் நுட்ப கூட்டு நிறுவனம் உள்ளது. பெரிய ரக காற்று ஆற்றல் மின்னாக்கிகளின் ஆய்வு, வளர்ச்சி மற்றும் தயாரிப்பில் இக்கூட்டு நிறுவனம் ஈடுபடுகின்றது. இக்கூட்டு நிறுவனத்தில் அன்னிய இளைஞர்கள் மூவர் பணி புரிகின்றனர்.

Ungaro Florence, பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். பல்கலைக்கழகத்தில் அவர் மின்னியல் துறையில் கல்வி பயின்றார். 2003ஆம் ஆண்டு, பயிற்சி பெற, அவர் பெய்சிங்கிற்கு வந்தார். அவர் சிறு வயதிலிருந்து சீனப் பண்பாட்டின் மீது கொண்டுள்ள பெரும் ஆர்வமே இதற்கு காரணமாகும். அவர் கூறியதாவது:
"சிறு வயதிலிருந்தே சீனா மீது ஆர்வம் கொண்டுள்ளேன். சீனா தனிச்சிறப்பு மிக்கது. செழிப்பான சீனப் பண்பாடு, பழமை வாய்ந்தது. சீன எழுத்துக்கள் மிகவும் அழகானவை. படிப்பை முடித்த பின், சீனாவில் பணி புரிந்து, வாழ விரும்பினேன். ஆனால் நான் படிப்பை முடித்த பின், சீனாவுக்கு வருகை தர வாய்ப்பு எனக்கு இல்லை. பிரான்சு நாட்டில் வேலை செய்தேன்" என்றார், அவர்.
1 2 3
|