இருந்த போதிலும், பிரான்சு நாட்டில் வேலை புரி்ந்த இரண்டு ஆண்டுகளில், சீனாவில் வேலை செய்வதற்கான வாய்ப்பை அவர் தேடினார். பின்னர், நண்பர் ஒருவரின் பரிந்துரையுடன், சிங்கியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் உருமுச்சி நகருக்கு வந்து, Jin Feng கூட்டு நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கினார்.

சீனாவில் வேலை செய்யும் விருப்பம் நனவாகியது. ஆனால் அவரது வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டது. அவரது காதலன், சீன மொழி பேச முடியாமல், பிரான்சு நாட்டில் வாழ்வதென முடிவு செய்தார்.
இவ்வாறு, 2003ஆம் ஆண்டு Ungaro Florence தமது காதலனிடமிருந்து பிரிந்து, சீனாவுக்கு வந்தார். சீனாவையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு லட்சியத்தையும் நேசிப்பதால், தாம் இம்முடிவு எடுத்ததாக அவர் கூறினார். அவர் கூறியதாவது:
"சீனா விரைவாக வளர்ந்து வருகிறது. மேலதிக எரியாற்றல் சீனாவுக்கு தேவைப்படுகிறது. நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்த முடியாது என்று நினைக்கின்றேன். ஆகவே, காற்று ஆற்றல் மின் உற்பத்திக்கு ஆதரவளிக்கின்றேன். இது, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது"என்றார், அவர்.
1 2 3
|