• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-24 12:39:40    
மகிழ்ச்சியான பிரான்சு நாட்டவர் Ungaro Florence

cri

உருமுச்சி நகர் வந்தடைந்ததற்கு பிந்திய முதல் இரண்டு திங்களில், அவர் இந்நகர் மீது சிறப்புமிக்க உணர்வு கொண்டுள்ளார். இங்கு செழிப்பான சிறுபான்மை தேசிய இனப் பண்பாடுகளினால், உய்கூர் இன மொழியைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது. உள்ளூர் பிரதேசத்தின் மொழியைக் கற்றுக்கொள்வதன் மூலம், சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டை மேலும் அறிந்து கொள்ள அவர் விரும்புகின்றார். அவர் கூறியதாவது:

"சிங்கியாங்கில் பல தேசிய இனங்கள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, உய்கூர் இனம் மற்றும் கசாக் இனம். உய்கூர் மொழியை கற்றுக்கொள்ள விரும்புகின்றேன். ஏனெனில், இங்கு நீண்டகாலமாக வாழ்ந்தால், உய்கூர் இன மொழியை நான் பயன்படுத்தலாம். மேலும் தடையின்றி தொடர்பு மேற்கொள்ளும் வகையில், இதர இனங்களின் மக்கள், தத்தமது மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று உய்கூர் இன மக்கள் விரும்புகின்றனர்" என்றார், அவர்.

உருமுச்சி நகரில் Ungaro Florence நண்பர்கள் பலருடன் பழகி கொண்டுள்ளார். நண்பர்களுடன் இணைந்து, ஆடல் ஆடி பாடல் பாடி, கூடைப்பந்தாட்டம் மற்றும் மேசை பந்தாட்டம் விளையாடுகின்றார்.

சுற்றுலா, Ungaro Florenceவின் மற்றொரு பொழுதுபோக்கு. விடுமுறை நாட்களில், அவர் நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி சுற்றுப் பயணம் செய்கின்றார். அவர் கூறியதாவது:

"Tian Shan மலை, Nan Shan மலை, Tu Lu Fan ஆகிய இடங்களுக்குச் சென்றுவிட்டேன். சிங்கியாங்கில் உள்ள பல இடங்களுக்கு வருகை தர விரும்புகின்றேன். சிங்கியாங்கின் இயற்கைக் காட்சிகள் மிகவும் எழில் மிக்கவை. காஷ் நகர், Takelamagan பாலைவனம், Khanas ஏரி ஆகிய இடங்களுக்கு சென்று சுற்றுப் பயணம் செய்ய விரும்புகின்றேன்"

சில ஆண்டுகள் ஆகின்றன. தமது குடும்பத்தினர் மற்றும் காதலன் சீனாவுக்கு வருகை தந்து, தன்னை பார்க்க உள்ளதாக Ungaro Florence தெரிவித்தார். தமது குடும்பத்தினரை நன்றாக உபசரிக்கும் பொருட்டு, சிங்கியாங்கில் சுற்றுலா செய்யும் திட்டத்தை அவர் வகுத்துள்ளார்.


1 2 3