• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-26 09:39:27    
மணல் தடுப்புப்பணியாளர் Wang Youde

cri

     

சீனாவின் வடமேற்குப் பகுதியின் ning xia hui இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் wang youde என்னும் hui இன நடுத்தரவயதினர், கடந்த 20 ஆண்டுகளில் மணல் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். வன நிர்வாகப் பகுதியின் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்ட மணல் தடுப்புப் பணியில் 20 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்புடைய காடு வளர்ப்புக்கு அவர் தலைமை தாங்கியுள்ளார்.

1985ம் ஆண்டில், 30வது வயதான wang youde, ning xia hui இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ling wu நகரிலுள்ள bai jitan மணல் தடுப்பு மற்றும் வன நிர்வாகப் பகுதியில் வேலையில் சேர்ந்தார். அப்போதைய bai jitan, mao wusu பாலைவனத்தின் விளிம்பில் இருந்தது. அதைச் சுற்றி பாலைவனம் அமைந்திருந்தது. மென்மேலும் கடுமையான பாலைவனமயமாக்கத்தால், விவசாயிகளின் நிலத்தில் எந்த விளைச்சலும் இல்லை. மணற்காற்றால், விவசாயிகள் வேறு இடங்களுக்கு குடிபெயர நிர்ப்பந்திக்கப்பட்டனர். wang youde கூறியதாவது

முன்பு பாலைவனமயமாக்கத்தால் பழம் மற்றும் தானிய விளைச்சல் ஏதுமில்லை. அப்போதைய bai jitan மணல் தடுப்பு மற்றும் வன நிர்வாகப் பகுதி வறுமையான பகுதியாக இருந்தது. பணியாளர்களுக்கு ஊக்கம் இல்லை. வனத் தொழில், தேக்க நிலையில் இருந்தது. ஓர் ஆண்டின் 7 திங்களில், பணியாளர்களுக்கு, வேலை ஏதுமில்லை. ஆண்டு வருமானம், நூறு யுவான் மட்டுமே. வனத்தொழில் பணியாளர்களில் பெரும் பாலானோர் பணி இடமாற்றத்தைக் கோரினர். ஆனால், சிக்கல் வாய்ந்த பல பிரச்சினைகளைக் கண்டு இந்த இளம் தலைவர் தப்பிச் செல்ல வில்லை. வன நிர்வாகப் பகுதி நிறுவப்பட்ட பிறகு, முதல் சீர்திருத்தத்தை அவர் செய்ய துவங்கினார்.

1 2 3