ஷௌஷான், சீனாவின் நடுவிலுள்ள ஹுநான் மாநிலத்தின் ஒரு மாவட்ட நிலை நகரமாகும். இது, நவ சீனாவின் நிறுவனர் மா சே தூங்கின் பிறந்த ஊர் ஆகும். போக்குவரத்து வசதியின்மை, மக்கள் தொகை குறைவு ஆகியவற்றால், உள்ளூர் பொருளாதாரம், மந்தமாக வளர்ந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, அங்குள்ள சிறப்புகளைப் பயன்படுத்தி, பொருளாதாரத்தை வளர்ப்பது எப்படி என்று, ஷௌஷான் ஆக்கப்பூர்வமாக ஆராய்வு செய்தது. சுற்றுலாவை வளர்ப்பதன் மூலம், பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றும் வழிமுறைகளை அது கண்டறிந்துள்ளது.
நீங்கள் இப்பொழுது கேட்கின்ற பாடல், சீன மக்கள் தலைவர் மாவைப் பாராட்டும், அனைவருக்கும் தெரிந்த ஒரு பாடலாகும். ஷௌஷான், சீன மக்களால் தலைவரின் ஊர் என்று அழைக்கப்பட்டு, சீனாவில், புகழ்பெற்றதாக இருக்கிறது. பலர், அங்கு சுற்றுப் பயணம் செய்து, தலைவர் மா முன்பு வாழ்ந்த இடத்தின் சுற்றுச்சூழலை அறிந்து கொள்கின்றனர். புரட்சிகர நினைவு இடங்கள், நினைவுப் பொருட்கள், அவற்றின் புரட்சிகர எழுச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தி, பார்வையிட பயணிகளை ஈர்ப்பது, சீனாவில் புரட்சிகர புனித இடங்களிலான சுற்றுலா என அழைக்கப்படுகிறது.
இப்படியான சுற்றுலா, அங்கு பெரிய அளவில் மேம்பட்டதை, சில ஆண்டுகளுக்கு முன், ஷௌஷான் உள்ளூர் அரசு, அறிவு கூர்மையுடன் கண்டறிந்தது. இம்மேம்பாட்டைப் பெரிதும் வெளிக்கொணர்ந்து ஷௌஷானின் சுற்றுலாவை சீனாவின் புரட்சிகர புனித இடங்களிலான முதல் தர சுற்றுலா இடமாக மாற்ற வேண்டும் என்று உள்ளூர் அரசு, ஆக்கப்பூர்வ ஆராய்ச்சிகள் மூலம், தீர்மானித்தது.
1 2 3 4
|