மா சே தூங் நினைவு மண்டபம், ஷௌஷான் புரட்சிகர சுற்றுலா இடங்களிலுள்ள முக்கிய காட்சித்தலமாகும். இம்மண்டபத்தின் உள் புறம், விசாலமாகவும், சுத்தமாகவும் இருக்கிறது. இதிலுள்ள வசதிகள் முழுமையாக உள்ளன. அங்கு, கணினி மூலம் தகவல் ஆலோசனை பெறும் முறைமை இருக்கிறது. இம்மண்டபம், தகவல் ஆலோசனையை பயணிகளுக்கு இலவசமாக விளக்கிக் கூறும் சேவையை வழங்குகிறது.
மா சே தூங், விவசாயியின் குழந்தையாக இருந்து உறுதியான மார்க்சிசவாதியாக மாறிய போக்கை, இக்காட்சி இடம், முக்கியமாக அறிமுகப்படுத்துகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் புரட்சிகர புனித சுற்றுலா இடங்களில் முதல்தரமானதாக இதனை மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளை நனவாக்குவதற்கு, ஷௌஷான் அரசு, அறிவியல் பூர்வமான வளர்ச்சித்திட்டத்தின் மூலம், சுற்றுலாவின் பொருளாதாரக் கட்டுமானத்துக்கு வழிகாட்டியுள்ளது. அதே வேளையில், அடிப்படை வசதி கட்டுமானம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பணியாளர்களின் கல்வி அறிவு முதலிய துறைகளிலும், ஈடுபாடு காட்டியுள்ளது.
1 2 3 4
|