• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-06 19:13:27    
அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக்

cri

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை குடும்ப அளவில் ஏதாவது முக்கிய திட்டங்கள் என்றால் அதற்கு நீண்டகால தயாரிப்பு இருந்து வந்தது. வீடு கட்ட முடிவு செய்து விட்டால் முதலில் மரங்களை வாங்கி, அதிலிருந்து கதவு நிலைகள், சன்னல் சட்டங்கள் மற்றும் அவற்றிற்கு தேவைப்படும் பலகைகளை எல்லாம் ஏற்பாடு செய்து வைப்பர். பின்னர் அடித்தளத்தை தோண்டி, கருங்கல்லால் கதவு நிலைகளின் கீழ்மட்டம் வரை கட்டி முடிப்பர். வாங்கி வைத்த மரங்களை செதுக்கி கதவு நிலைகளை தச்சர் செய்து முடித்துவிட்டவுடன், செங்கல் மற்றும் காரையை தயாராக வாங்கி அடுக்கி வைத்துவிட்டு அடுத்தக்கட்ட பணிகளை தொடங்குவர். கூரை மட்டம் வரை இப்பணி தொடரும். பின்னர் ஏற்கெனவே திட்டமிட்ட படி அது மாடி வீடாக இருந்தால் அதற்கான கம்பி மற்றும் சல்லியும், ஓடு வீடாக இருந்தால் பனை அல்லது மர சட்டங்கள், குறுக்கு சட்டங்கள் ஆகியவற்றை தயார் செய்துவிட்டு வேலையை தொடங்கி கூரைப்பகுதி வேலைகளை முடிப்பர். கடைசிகட்டப் பணிகளாக மின்சார வசதி, சுவரை காரை கொண்டு பூசுதல், நீர் குழாய் வசதி, வண்ணமடித்தல் போன்ற வீட்டின் உள்புறப் பணிகள் மூலம் அழகுற செய்வர்.

இந்த முயற்சிகளில் எல்லாம் அவ்வீட்டார் மற்றும் குடும்ப உறவினர்கள் அனைவருமே பங்கேற்பர். இத்தகைய குடும்ப முயற்சிகள் போன்று தான் பெய்சிங் ஒலிம்பிக் பணிகளை நம்மால் பார்க்க முடிகிறது. 2001 ஆம் ஆண்டில், 2008 ஆண்டு 29 வது கோடைகால ஒலிம்பிக் போட்டியை சீனா, பெய்சிங் மாநகரில் நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது. அது முதல் இதுவரை சீன அரசும் மக்களும் இணைந்து, தெளிவான செயல் திட்டங்களோடு ஆயத்தப் பணியில் இறங்கினர். அனைத்து திட்டப்பணிகளும் திட்டமிட்டதற்கு முன்கூட்டியே முடிக்கப்பட்டன. உயர் நிலையான ஒலிம்பிக், அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக், மனித மைய ஒலிம்பிக், தூய்மையான ஒலிம்பிக், பசுமை ஒலிம்பிக் என்பவை இந்த திட்டப்பணிகளின் நடைமுறையின் போது அடிப்படை தாரக மந்திரங்களாயின. ஒவ்வொரு திட்டப் பணிகளிலும் அனைத்துலக அளவில் தலைசிறந்த நுட்பங்கள், ஒலிம்பிக் கருத்துக்களை நிறைவேற்றும் விதமாய் பயன்படுத்தப்பட்டன. அனைத்து பணிகளையும் திட்டமிட்டப்படி முடித்துவிட்டு "நாங்கள் தயார். பெய்ஜிங் வரவேற்கிறது" என்று பெருமையுடன் கூறும் இக்காலகட்டத்தில், அவ்வாறான ஆக்கப்பணிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள சில தொழில் நுட்பங்களை உங்களுக்கு இன்றைய நிகழ்ச்சியில் அறிய தருகின்றேன்.

1 2 3