• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-06 19:13:27    
அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக்

cri

போட்டிகள் அனைத்தும் இயல்பாக நடைபெற பாதுகாப்பை வலுப்படுத்தி, அச்சுறுத்தல்களை அறியும் விதமாக கப்பற்படை, நீருக்கடியில் கண்காணிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது. நீருக்கடியில் செயல்படக்கூடிய ஒளிப்படக்கருவிகள், இயந்திர மனிதர்கள் மற்றும் நீருக்கடியில் இருந்து ஆய்வு செய்கின்ற வீரர்கள் என பல்வகை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக சிங்தாவ் ஒலிம்பிக் பாய்மர படகோட்ட போட்டிக் குழுவின் துணைத் தலைவரும், நகர தலைவருமான Zang Aimin தெரிவித்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் சரியாக அமைய இயந்திர மனிதர்களும், ஒளிப்படக் கருவிகளும் நீருக்கடியில் பொருத்தப்பட்டுள்ளன

முன்பு, பாய்மர படகோட்ட போட்டி நடைபெறும் 32 விழுக்காட்டு கடற்பரப்பில் பாசிகள் நிறைந்து காணப்பட்டது. ஒரு மில்லியன் டன் கடற்பாசிகளை 1400 படகுகள், 10 ஆயிரம் படைவீரர்கள் மற்றும் தொண்டர்கள் மூலம் ஜூலை 15 ஆம் நாளுக்கு முன்பு அகற்றியுள்ளனர். இந்த தயாரிப்பு பணிகளுக்காக 481 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, தகவல் தொடர்பு சேவை ஒலிம்பிக்கிற்கு மிக முக்கியமாகும். இதனை சிறப்பாக செயல்படுத்த சீனாவில் தயாரிக்கப்பட்ட 3ஜி தகவல் தொடர்பு தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்களிலும், ஊடக மையங்களிலும், ஒலிம்பிக் கிராமம், ஒலிம்பிக்கின் போது சேவை புரியும் தங்கும் வசதிகள் அமைந்த உணவகங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் இந்த வசதிகள் பொருத்தப்பட்டு விட்டன. அவசர தகவல் தொடர்பு அமைப்பும் தயாராக உள்ளது. இந்த 3ஜி தகவல் தொழில் நுட்பம் மிக முக்கிய பங்காற்றி ஒலிம்பிக்கில் மைய இடம்பெறும் என்று தொழில் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் Xi Guohua தெரிவித்துள்ளார்.

நம்முடைய வீடுகளில் நடைபெறும் கொண்டாட்டத்திற்கான பணிகளை போல, பெய்சிங் ஒலிம்பிக் ஆயத்தப்பணிகளை சீனா மேற்கொண்டு முடித்துவிட்டது. இந்த விளையாட்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பல்சுவைகளை அனுபவிக்க அனைத்துல மக்களையும் சீனா வரவேற்கின்றது.


1 2 3