• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-06 19:13:27    
அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக்

cri

இயற்கை மாசுபாடுகளற்ற தூய்மையான ஒலிம்பிக் போட்டியை நடத்த சீனா முழு மூச்சோடு அதற்கான பணிகளை ஆற்றியுள்ளது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின்போது பயன்படுத்தப்படும் எரியாற்றல் அதிக மாசுப்பாட்டை உருவாக்க கூடாது என்பதில் கவனம் செலுத்தப்பட்டது. மின்னாற்றல் பெய்சிங் ஒலிம்பிக்கிற்கு மிக முக்கிய எரியாற்றலாகும். விளையாட்டு அரங்குகள், ஒலிம்பிக் கிராமம், ஒலிம்பிக் ஊடக கிராமம் என பல கட்டமைப்புகளுக்கு மின்னாற்றல் மிக முக்கியம். நிலக்கரி முதலிய மூலப்பொருட்களை கொண்டு, குறிப்பாக மின்னாற்றல் உற்பத்தி செய்யப்படும் முறைவழியாக்கத்தில் கரியமில வெளியேற்றம் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு, காற்றாலை மூலமான மின்னாற்றல் உற்பத்தி திட்டம் நனவாக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கின் புறநிலப்பரப்பில் இயங்கி வருகின்ற இந்த காற்றாலை திட்டத்தின் மூலம் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேவையான 20 விழுக்காடு மின்னாற்றல் உற்பத்தி செய்யப்படுவதாக தெரியவருகிறது.

அண்மையில் நிறுவப்பட்டுள்ள காற்றாலை மூலம் பெய்சிங் மாநகரத்தில் பெரும் அளவிலான மின் உற்பத்தி செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இது ஒலிம்பிக்கின் பசுமை ஒலிம்பிக் என்ற கருத்தை எடுத்துக்காட்டுகிறது. 64,500 கிலோவாட் மின் உற்பத்தி செய்யும் திறனுடைய இக்காற்றாலையில் சீன மண்ணில் தயாரிக்கப்பட்ட 43 காற்றாலை தொகுதிகள் இயங்கி வருவது குறிப்பிடதக்கது. ஜனவரி 20 ஆம் நாளிலிருந்தே தனது மின்னாற்றல் உற்பத்தியை தொடங்கியுள்ள இவ்வாலை, இதுவரை 35 மில்லியன் கிலோவாட் மின்னாற்றலை பெய்ஜிங்கிற்கு வழங்கியுள்ளது. ஆண்டுதோறும் 100 மில்லியன் கிலோவாட் மின்னாற்றலை வழங்கவுள்ள இத்திட்டப்பணி, ஒரு இலட்சம் வீடுகளுக்கான மின்னாற்றல் தேவையை நிறைவு செய்யக்கூடியதாய் அமையும். அத்தோடு ஒரு இலட்சம் டன் கரி வெளியேற்ற அளவை குறைப்பதோடு 50 ஆயிரம் டன் நிலக்கரியையும் சேமிக்க உதவுகின்றது.

அடுத்து, ஒலிம்பிக் போட்டியின் போதான பாதுகாப்பு பணி மிகவும் முக்கியமானது. வெளிநாடுகளிலிருந்து வருகின்ற விளையாட்டு வீரர்களும், சுற்றுலாப்பயணிகளும் தகுந்த பாதுகாப்போடு, இயல்பாக தங்கியிருக்கும் கடப்பாட்டை செயல்படுத்துவது இன்றியமையாதது. இதற்காக சீன அரசு பல்வேறு பாதுகாப்பு பணிகளை செயல்படுத்தி வருகிறது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை பெய்ஜிங் மாநகரத்தோடு இணைந்து ஒத்துழைத்து நடத்தும் மாநகரங்களில் சிங்தாவ் ஒன்றாகும். ஆகஸ்ட் 9 முதல் 23 ஆம் நாள் வரை பாய்மர படகோட்ட போட்டி, சீனாவின் ஷான்துங் மாநிலத்தின் கடற்கரை நகரான சிங்தாவ் மாநகரில் நடைபெறுகிறது. இதனை நடத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை சிங்தாவ் செவ்வனே செய்துள்ளது.

1 2 3