கலை.......வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம்.
தமிழன்பன்........இந்த நிகழ்ச்சி மூலம் நாங்கள் இருவரும் உங்களுக்கு சேவைப் புரிவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.
கலை........ஆமாம். இவ்வாண்டு முதல் நாங்கள் ஏறக்குறைய 6 முறை நேயர் நண்பர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடை அளித்துள்ளோம். அனைத்தும் பயன் மிக்கவையாக இருந்தன என அறிந்து மகிழ்ந்தோம்..
தமிழன்பன்.......ஆனால் பலருக்கு பதிலளித்த நிகழ்ச்சிகளை கேட்ட போது இன்னும் பல சந்தேகங்கள் எழுந்ததை உணர்ந்துள்ளனர்.
கலை......குறிப்பாக எப்போது எந்த விழாவை கொண்டாடும் போது மஞ்சள் அரிசி மது குடிக்கலாம் என்பது தெளிவாக புரிய வில்லை என்று திருப்பூர் இரா சின்னப்பன் வினா எழுப்பினார். ஆகவே இன்றைய நிகழ்ச்சியில் நாங்கள் மீண்டும் தெளிவாக அதை பற்றி குறிப்பிட வேண்டும்.
1 2 3
|